பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் சகோதரப்பற்று 39 தங்களுக்கோ தாயாருக்கோ சிறு துயர் விளேக்கவும் கருதேன். இந்திய ஊழியர் சங்கத்தில் சேரவேண்டும் என்பது எனது பேராவல். அதற்குத் தங்கள் இசை தவயே நாடியிருந்தேன். தங்கள் சொல்லை என்றும் தட்டி நடந்ததில்லை. இனியும் அங்ஙனம் நடவேன். இன்று தாங்களே எனக்குத் தந்தையாராவீர்கள். தந்தையாருக்குப்பின் தந்தையில்லாத் துயரத்தைத் தனியாத பேரன்பால் தணித்துப் பேணி வருகிறீர்கள். தங்கள் அன்பை நான் ஒருநாளும் மறவேன். தங்கட்குத் துன்பம் தருவேயிைன் நான் நன்றி மறந்த பெரும் பாவியாவேன். மூத்தோர் சொல்லும் வார்த்தை அமுதம் என்பார்கள். ஆதலின் தங்கள் சொற்படி நடப்பதில் தான் எனக்குத் தனியின்பம் உண்டு. தங்கள் கருத்தை மறைக்காமல் உரைத்துவிட்டீர்கள். அதனை உணர்ந்த எனது உள்ளம் நிறைந்த ஆறுதல் அடைந்துவிட்டது. “ தங்கள் தம்பியாகிய நான் தங்கள் உத்திரவின்றி எதுவும் செய்யமாட்டேன். தங்கள் கருத்துக்கு மாருகவும் இடவேன். எனது வாழ்நாள் முழுதும் தங்கள் மனம் நோவாமல் நடந்துகொள்வேன். இளம் பருவத்திற்குரிய குறைகள் எல்லாம் என்பால் கிறைக் துள்ளன. அதனுல் திடீரென்று ஒன்றில் உள்ளத்தைத் திருப்பிவிட்டேன். தாங்கள் என்னிடம் எல்லேயில்லாத அன்பு கொண்டவர்கள். அவ் அன்பால் என்ன மன்னிக்க வேண்டுகிறேன். தங்கட்கு மனத்துயர் விளேத்ததைக் குறித்துப் பெருத்த வருத்தமடைகிறேன். அங்ங்னம் செய்யவேண்டுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. தந்தையாருக்கு ஒருகால் சிந்தையில் துயரத்தைக் கொடுத்தேன். அஃது அவர் உயிருக்கே