பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முதல் குடியரசுத் தலைவர் அழிவைத் தந்தது. தங்தையார் கிலேயில் இன்று விளங் கும் தங்கட்கும் துயர் இழைத்துவிட்டேனே எனது பிழையைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

  • இந்திய ஊழியர் சங்கத்தில் சேர வேண்டுமென்ற எண்ணம் இன்ருேடு என் உள்ளத்தைவிட்டு அகன்றது. ஆயினும் நாட்டிற்குப் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம், என் உள்ளத்தில் திண்ணமாகவே இருக் கிறது. அதனுல் என்னலான பொதுநலப் பணிகளைப் புரிந்துகொண்டே இருப்பேன். அதற்குத் தாங்கள் இசைவு தந்து ஆதரிக்கவேண்டும்.”

இங்ங்னம் இராசேந்திரர் எழுதிவைத்த கடிதத்தை மகேந்திரர் கண்டார். அதனைத் திரும்பத் திரும்பப் பன்முறை படித்துப் பார்த்தார். தம்பியின் உள்ளம் மாறியதைக் கண்டு தேறுதல் அடைந்தார். இராசேந்திர ரின் நேயம் நிறைந்த துரய உள்ளத்தையும் நேரில்லாத பணிவையும் கண்ட மகேந்திரர் மிகுந்த மகிழ்ச்சியடைந் தார். தம்பியால் தம் குடும்பம் தழைத்தோங்கும் என்று நம்பி இன்புற்ருர், கக. இராசேந்திரர் வழக்கறிஞர் முன்னுளில் அரசாங்க உத்தியோகம் பெறுவதைப் பெரும்பேருகக் கருதுவர் மக்கள். அதற்கு அடுத்த தகுதியில் வழக்கறிஞராகத் தொழில் புரிவதையே பெரிதும் விரும்புவர். நுண்ணறிவும் திண்ணிய சொல் வன்மையும் உடைய வழக்கறிஞர்க்கு வருவாய் வெள்ளம் போல் வந்து பெருகும். அதனல் இராசேந்திரரைச் சட்டத் தேர்வில் தேர்ச்சியடையுமாறு செய்ய வேண்டு