பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பெருநாடுகளில் தலைசிறந்தது நம் இந்திய நாடு. இந் நாட்டில் கங்கைப் பயனும் காவிரி யொழுக்கமும் வையைப் பேரியாற்றின் மாரு வளனும் செழிப்புற உயிர்களைப் புரந்துயர்த்துவனவாம். இத்தகைய வண்மை சான்ற இந்திய நாடு வடக்கே பேரிமயமலை யையும் தெற்கே பொதியின் மலையையும் கொண்டு அளக்கலாகாப் பெருமையின் உரிமை கொண்டது. இந் நாடு தன்னுரிமையின்றிப் பிறர் பிறர் வந்து வந்து அடிமை கொள்ள அடிமை யாகி ஆகித் தளர்வுற்றது. இறுதியாக ஆங்கிலேய ருக்கு அடிமையாகி அவர் ஆட்சிக்கீழ், தன் ஒளி மங்கி வரலாயிற்று. - அதையறிந்து நம் பாரத நாடு விடுதலை பெறத் தங்கலம் துறந்து முன்னின்று கொண்டாற்றிய வீரர்களுள் திரு. இராசேந்திராவர்களும் ஒருவராவர். இவர் உலகப் பெரியார் காந்தியடிகளின் வழிகின்று பணி புரிய, நம் நாடு விடுதலை பெற்று 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டுக் திங்கள் 15-ஆம் நாள் உரிமை (சுதந்தரம்) பெற்றது. - உரிமை பெற்ற காடு, மக்கள்ாய்க நாடாக மிளிர்தல் வேண்டும். ஆகவே, காடு அமைப்புக் குழுவினர் காங்கிரசுப் போவை முடிவுப்படி 1950.ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 26-ஆம் நாள் குடியரசுத் திருநாடாக மலர்ச்சி கொண்டது. அதற்கு முதன்