பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் வழக்கறிஞர் 41 இமன அவர் தமையனர் ஆவல் கொண்டார். இராசேந் திரரும் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தால் வழக் கறிஞராகத் தொழில் புரிந்து பெரும்பொருளைத் திரட்ட லாம்; தன் குடும்பத்தையும் நன்கு பாதுகாத்து, வறிய வர்க்கும் மிகுதியாக உதவலாம் என்று எண்ணினர். தமையனுர் விருப்பிற்கிணங்க இராசேந்திரர் கல்கத்தா நகரை அடைந்து சட்டக்கல்லூரியில் சேர்க் தார். 1911-ஆம் ஆண்டில் சட்டத் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் தொழிலே மேற்கொண்டார். அங் நாளில் பீகார் மாகாணத்தில் உயர்நீதிமன்றம் இல்லே. ஆகையால் கல்கத்தா உயர்நீதிமன்றத்திலேயே அவர் தமது பணியைத் தொடங்கினர். அவர் மாணவராக இருக்கும்பொழுதே சிறந்த மதிநலம் படைத்தவர் என் பதைப் பலரும் அறிவாராதலின் அவரிடம் ஆரம்பத் திலேயே மிகுதியான வழக்குகள் வந்து குவிந்தன. அதல்ை அவருக்குத் தொடக்கத்திலேயே வருவாயும் பெருக்கமாக வந்தது. பயிற்சி முதிர்ந்த பெரிய வழக் கறிஞர்களும் அவரது வருவாயைக் கண்டு வியந்தார்கள். கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கறிஞர்க்கும் இராசேந்திரரைப் போல் ஆரம்ப காலத்தில் அவ்வளவு வருவாய் வந்ததில்லை. - சில ஆண்டுகளில் இராசேந்திரர் புகழ்பெற்ற வழக் கறிஞராகத் திகழ்ந்தார். அவர் தமக்கு வரும் செல்வப் பெருக்கினைக் கண்டு செருக்குற்ருரல்லர். அடக்கமே வடிவாய் அன்பே உருவாய் அவர் விளங்கினர். எளிய மாணவர்க்கும் வறிய மக்களுக்கும் தகுந்த உதவி புரிந்தார். பேரறிவாளராகிய அவருடைய செல்வம் ஊருணியில் நீர் நிறைந்தாற் போல் எல்லோருக்கும்