பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

垒2 முதல் குடியரசுத் தலைவர் பயன்பட்டது. இராசேந்திரரை இன்னருள்வள்ளல் என்று எல்லோரும் ஏத்தினர்.

  • . இராசேந்திரர் காலத்தைப் பொன்னே போல் கருதுபவர். ஒரு சிறு பொழுதையும் வீணே கழிக்க விரும்பார். ஓய்ந்த நேரங்களில் சட்ட நூல்களே ஆய்ந்து கொண்டே இருப்பார். அதனல் சட்டக் கலையில் அவருக்கு நுட்பமான புலமை வளர்ந்து கொண்டே வந்தது. அவர் 1915-ஆம் ஆண்டில் எம். எல். பட்டத் தேர்வுக்கு எழுதினர். அதில் அவர் மாகாண முதல்வராக வெற்றியுற்ருர். அதனை அறிந்த கல்கத்தா வழக்கறிஞர் கழகத்தார் அவருக்குச் சிறந்த விருந்தொன்று நடத்தி அவரது சட்டநூல் புலமையை வியந்து போற்றினர்.

பீகார் மாகாணத்தின் தலைநகரமாகிய பாட்ணுவில் 1916-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் ஒன்று நிறுவப் பட்டது. உடனே இராசேந்திரர் தம் மாகாணத் தலை நகரிலேயே தொழில் புரியத் தொடங்கினர். அங்கே அவருக்குக் கல்கத்தா வழக்கறிஞர்' என்று பெயரும் புகழும் விரைவில் பரவியது. அங்கும் அவருக்கே வழக்குகள் வந்து குவிந்தன; வருவாயும் அளவின்றி வந்து கிறைந்தது. பாட்ன உயர்நீதி மன்றத்தில் இராசேந்திரர் இணையற்ற வழக்கறிஞராக விளங்கி வந்தார். அவர் பொய்யான வழக்குகளே இகழ்ந்து புறக் கணிப்பார். உண்மையான வழக்குகளேயே ஏற்றுத் திண்மையுற நடத்தி வெற்றியும் காணுவார். திே மன்றத்தலைவர்களும் பிற வழக்கறிஞர்களும் அவருடைய நேர்மையையும் சீர்மையையும் நெஞ்சாரப் போற்றுவர். அறிவும் செல்வமும் ஒருங்கு செறிய உயர்ந்த வழக் கறிஞராய் விளங்கிய இராசேந்திரர் ஆடம்பர வாழ்வை