பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் வழக்கறிஞர் 4路 விரும்பவில்லை. எப்பொழுதும்போல் எளிய வாழ்வையே இனிய முறையில் நடத்தி வந்தார். அவருடைய பேராற்றலே ஆங்கில அரசாங்கமும் அறிந்து வியந்தது. அவருக்கு உயர் நீதிமன்றத் தலைவர் பதவி வழங்கவும் தக்க சமயத்தை எதிர்நோக்கி இருந்தது. முதல் உலகப்போர் 1919-ஆம் ஆண்டில் முடி வுற்றது. அப் போர் நடைபெற்ற காலத்தில் தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஆங்கில அரசாங்கத்தார் இந்தியத் தலைவர்கள் பலரைக் காவலில் வைத்திருந்தனர். போர் முடிவுற்றதும் இந்தியத்தலைவர்களே அடக்குதற்கு மிகவும் கொடிய ரெளலட் சட்டம் என்ற சட்டத்தை ஆங்கில அரசாங்கம் கொண்டு வந்தது. தேசப் பணி புரியும் எவனும் தனது வீட்டில் இனிது வாழ முடியாதவாறு தடுக்க வல்ல கொடுமையான சட்டம் அது. அதனே நாடு முழுதும் ஒன்றுபட்டுக் கண்டித்தது. டில்லிச் சட்ட மன்றத்தில் இருந்த இந்திய உறுப்பினர் மூவர் அதனே எதிர்த்துத் தம் பதவியை உதறி எறிந்து வெளியேறினர். இதனுல் உள்நாட்டில் குழப்பமும் கலகமும் விளைந்துவிடுமோ என்று அஞ்சினர் காந்தி யடிகள். அவர் எங்கும் உண்மையும் அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்பினர். அவ் இரண்டின் துனே கொண்டு ஆங்கிலேயரின் உள்ளத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே, அவர் ரெளலட் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரக இயக்கத்தை உண்டுபண்ணினர். சத் தியத்தின் அடிப்படையில் அறப்போர் புரிவதே அவ் இயக்கத்தின் நோக்கமாகும். பிறருக்குச் சிறிதும் துன்பம் செய்யாமல், துன்பம் அனேத்தையும் தானே