பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

连垒 முதல் குடியரசுத் தலைவர் அனுபவித்துக்கொண்டு, அரசியல் குறைகளே அகற்று தே அவ் இயக்கத்தின் கடமையாகும். இத்தகைய அறப்போர் இயக்கத்தைக் காந்தியடிகள் இந்திய நாடெங்கும் பரப்பினர். இவ் இயக்கத்தில் வழக்கறிஞர் ங்கு கொண்டனர். நாட்டுப் பணியில் பெரும் பலர் பங்கு நாட்டமுடைய இராசேந்திரரும் இவ் இயக்கத்தில் ஈடு பட்டார். அதனல் ஆங்கில அரசாங்கம் அவரை வெறுத்தது. அவருக்குக் கிடைக்க இருந்த நீதிமன்றத் தலைவர் பதவியும் கிட்டாது போயிற்று. இராசேந்திரர் இவ் இயக்கத்தில் ஈடுபடாதிருப்பாரானல், முன்பு இந்துஸ்தான் ரிவ்யூ திங்கள் இதழ் எழுதியவாறு திே மன்றத் தலைவர் பதவியை நிச்சயம் பெற்றிருப்பார். N 7 ~ege:Kawistiatxt கஉ. இராசேந்திரர் பல்கலைக்கழகப் பணி பாடலிபுரம் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இராசேந்திரர் தொழில் கடத்தி வரும் நாளில் அவர் கலந்துகொள்ளாத பொதுநலப் பணி எதுவுமே இராது. மக்களுக்கு நன்மை விளக்கும் எத்தகைய முயற்சியிலும் கிளர்ச்சியிலும் அவர் முன் கிற்பார். செல்வத்தை ஈட்டு வதினும் காட்டிற்குச் சேவை செய்வதே வாழ்க்கையின் சிறந்த பயன்’ என்று கினைந்து அவர் பொதுப் பணியில் முனைந்து நிற்பார். அக் காலத்தில் பாடலிபுர நகரில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவ, டில்லிச் சட்ட மன்றத்தில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அச் சட்டத்தில் பல குறை பாடுகள் கிறைந்திருந்தன. அதனல் பீகார் மாகாணப் பெருமக்கள் அச் சட்டத்தைப் பெரிதும் வெறுத்தனர்.