பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் பல்கலைக்கழகப் பணி 45 இராசேந்திரர் அச் சட்டத்திலுள்ள குறைபாடுகளேக் இந்து நோக்கி ஆய்ந்து தொகுத்தார். அவற்றைப் பல செய்தித்தாள்களில் கட்டுரைகளாக வெளியிட்டு அரசாங் ஆத்திற்கும் பொதுமக்களுக்கும் அறிவித்தார். நகரிலே பல கூட்டங்களைக் கூட்டி அச் சட்டத்தை மறுத்துத் தம் கருத்துக்களே விளக்கினர். அதல்ை பீகார் மாகா னம் முழுதும் அச் சட்டத்தை எதிர்த்துப் பெருங் நிளர்ச்சி எழுந்தது. மாகாணம் முழுதும் கிளர்ச்சி ஏற்படவே அரசாங் தம் அதனை மதிக்கத் தலைப்பட்டது. பல்கலைக்கழகச் சட்டத்தில் தகுந்த திருத்தங்களே விரைந்து செய்தது. இதற்குப் பெருமுயற்சி செய்த இராசேந்திரரைப் பீகார் மக்கள் எல்லோரும் பெரிதும் போற்றினர். அதனல் இராசேந்திரர் பாட் ைபல்கலைக்கழக ஆட்சிக் குழுவில் ஓர் உறுப்பினரானர். உடனே, பல்கலைக்கழக மாணவர் தொகையைப் பெருக்க வேண்டுமென விரும்பினர். மாணவர் கட்ட வேண்டிய மாதச் சம்பளம் மிகுதியாக இருந்தால் தகுதியுடைய பலர் பல்கலைக்கழகக் கல்வி பெறமுடியாது என்று கருதினர். அதனல் மாணவர் சம்பளத்தைக் குறைக்க வழி தேடினர். மேலும், பல்கலைக்கழகத்தில் மாணவர் கற்க வேண்டிய காலத் தைக் குறைக்க வேண்டுமென்று வற்புறுத் தினர். அவர் அன்று செய்த முயற்சியெல்லாம் இன்று பயன் விளேத்து வருகிறது என்று சொல்லலாம். இங்ங்னம் இராசேந் திரர் கல்வித் துறையில் இய ற்றிய பணிகள் பலவாகும். இராசேந்திரர் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுப் பல கல்விப் பணிகளைப் புரிந்துகொண் டிருக்கும் நாளில் காந்தியடிகளின் ஒத்துழையாமைப்