பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ6 முதல் குடியரசுத் தலைவர் போர் உருவாயிற்று. அதில் தேசத் தலைவர்கள் பலர் கலந்தனர். இராசேந்திரரும் அப் போரில் ஈடுபட்டார். அதனுல் பல்கலைக்கழக உறுப்பினர் பதவியினின்று விலகினர். அது கண்ட பல்கலேக்கழக அதிகாரிகள், "ஊக்கமாக ஆக்க வேலேகள் புரியும் அரிய உறுப்பின ரைப் பிரிய நேர்ந்தது ' என்று பெரிதும் வருந்தினர். ஒத்துழையா இயக்கத்தின் நோக்கங்களை நிறை வேற்ற, இளைஞர்க்குத் தேசியக் கல்வி ஊட்ட வேண்டு மெனத் தலைவர்கள் முயன்றனர். அதன் பயணுக இராசேந்திரர் பீகார் வித்தியா பீடம் என்னும் தேசியப் பல்கலைக்கழகத்தைப் பாடலிபுரத்தில் நிறுவினர். அதனைக்கண்ட மாணவர் அனைவரும் ஆங்கிலப் பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறினர். சிறந்த தேசியக் கல்வியைப் பெறுதற்கு மாணவரெல்லாம் பீகார் வித்தியா பீடத்தில் வந்து சேர்ந்தனர். இராசேந்திரர் அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக விளங்கி அரிய பணியாற்றினர். அங்கு உயர்ந்த காட்டுக் கல்வியை மாணவர்க்கெல்லாம் ஊட்டினர். பல்லாயிரம் மாண வர்கள் அதில் சேர்ந்து தேசிய முறையில் கலைப் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களெல்லாம் காட்டிற்குப் பணி புரியும் நல்ல தொண்டர்களாய் விளங்குமாறு பயிற்சி யளிக்கப் பெற்றனர். இத்தகைய தேசியப் பல்கலைக்கழகத்தை 1930-ஆம் ஆண்டில் காந்தியடிகள் திறந்து வைத்தார். ஆண்டு தோறும் அதில் பயிற்சி பெற்ற மாணவர் பலர் மாண் புடைய தேசத் தொண்டராய் வெளிவந்தனர். அவர்கள் கலையிலும் ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கக் கண்ட அரசாங்கம், பீகார் வித்தியா பீடத்தைப் பெரிதும்