பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் காந்தியடிகள் நட்பு 盛7 இபணிப் பாராட்டியது. இப் பல்கலைக்கழகம் பத் தாண்டுகள் வளர்பிறைத் திங்களைப்போல் வளர்க் தோங்கி வந்தது. சுதந்திரப் போரைக் கண்டு ஆத்திரம் கொண்ட ஆங்கில அரசாங்கம் 1980-ஆம் ஆண்டில் அதனே மூடிவிட்டது. கங். இராசேந்திரர் காந்தியடிகள் நட்பு பீகார் மாகாணத்தில் சம்பரான் மாவட்டம் இரு பகுதியாகும். சண்பகாரணியம் என்ற தொடரே சம்ப ரான் என்று மருவிற்று என்பர். அது மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தே மிகவும் சிறப்புற்ற நிலப் பகுதியாக மிளிர்ந்து வருவது. அங்குச் சண்பக மரங்கள் நிரம்ப உண்டு. சண்பக மலர் மிக்க மணமுடையது. அதனே வண்டுபடா மலர் என்று வழங்குவர். அதன் மகரந்தத்தை வண்டுகள் அணுகமாட்டா. அதனை அணு கினல் அவ் வண்டுகள் இறக்தொழியும் என்பர் அறிந் தோர். அத்தகைய சண்பக மரங்கள் நிறைந்த நிலப் பகுதி சண்பகாரணியம் என்றும் சண்பகவனம் என்றும் வழங்கலுற்றது. - இச் சண்பகவனம் பண்டை நாளில் பெருமுனிவர் களின் தவ வனமாய் விளங்கியது. உத்தானபாதன் என்னும் மன்னனின் உத்தமப் புதல்வகிைய துருவன் அவ் வனத்திலேதான் தோன்றினன். அவன் தன் தந்தையின் மடிமீது அமர முடியாமையால் அச் சண்பக வனத்திலிருந்து பெருந்தவம் புரிந்தான். அவனது தவத் திறம் கண்டு மகிழ்ந்த மாலோன் அவன் முன் னர்த் தோன்றிப் பல வரங்களே அருளினுன் என்பர். வடமொழி இராமாயணத்தைப் பாடிய வான்மீகி