பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முதல் குடியரசுத் தலைவர் முனிவன் வாழ்ந்த வனமும் இதுவே என்பர். இராமன் சீதையைக் காட்டில் விட்டுப் பிரிந்த பொழுது அவள் வான்மீகி முனிவனது தவச்சாலேயில் தங்கியிருந்தன ளாம். அங்கிருக்கும்போதுதான் அச் சீதைக்கு இலவன், குசன் என்னும் செல்வ மக்கள் இருவர் பிறந்தனர் என்பர். ன்ை. அப்பொழுது பரியொன்றை அணிசெய்து உல கெங்கும் சுற்றிவர அனுப்பினன். சண்பக வனத்தில் வான்மீகி முனிவனது தவச்சாலேயில் தங்கியிருந்த இலவ குசர்கள் அப் பரியைப் பிடித்து வந்து தவச்சால யின் முன்னர்க் கட்டிவிட்டனர். இதனே உணர்ந்த இராமன் படையுடன் வந்து இலவ குசருடன் பெரும் போர் புரிந்தான் என்று பேசுவர். பாண்டவர் ஐவரும் தமக்குக் குறித்த வன வாழ்வை முடித்துக் கரந்துறை வாழ்வை விராட நகரில் மேற்கொண்டனர் என்று பாரதம் பகரும். அவர்கள் மறைந்து வாழ்ந்த விராட நகர் அச் சண்பக வனத்தில்தான் உள்ளது. அதன் அருகே இராம நகரம் என்ற சிற்றுார் ஒன்றும் உண்டு. இராமன் ஒருகால் அசுவமேத வேள்வி இயற்றி சீதையின் தந்தையாகிய சனகப் பெருவேந்தன் இருந்தாண்ட நாடும் அதுவே என்பர். அப் பகுதியை விதேக நாடு என்று குறிப்பர். சீதையின் பெயரால் ஆங்குச் சானகிபுரம் என்னும் சிற்றுார் ஒன்றும் இருக் கிறது. அதனை இக் காளில் சங்கிகார் என்று வழங்கு கின்றனர். புத்தர் பெருமான் இச் சண்பக வனத்தின் வழியாகக் கெளசாம்பி நகருக்கு நடந்து சென்றதாக வரலாற்று நூல்கள் கூறும். அவருடைய எலும்புகள் அப் பகுதியிலுள்ள நந்தனபுரத்துத் தூபியில் இருக் கின்றன என்று ஆங்குள்ளார் சொல்லுவர்.