பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் குடியரசுத் தலைவர் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் இராசேந்திரர்; இவர் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; புகழெனின் உயிருங் கொடுக்கும் ஒண்மையர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ள உரவோர்; தெய்வங் கொள்கை மேம்பா டுற்ற பெரியார்; இத்தகையோர் நமக்குக் குடியரசுத் தலைவராக வாய்த்திருப்பது நாம் செய்த பாக்கியமே யாகும். பிறர்க்கென முயலும் அறத்தகையரான இரா சேந்திரர் வரலாற்றை யறிதல் இந்திய நாட்டு மக்கள் அறிய வேண்டுமவற்றை அறியும் பேரறிவாகும். ஆகவே, இராசேந்திராவர்களின் வரலாற்றை வித்துவான் திரு. அ. க. நவநீதகிருட்டிணன் அவர்களைக் கொண்டு எழுதுவித்து முதல் குடியரசுத் தலைவர் என்னும் பெயரால் அச்சிட்டு நூலுருவாக்கி வெளி யிட்டுள்ளோம். இவ் அரிய நூலை ஆக்கித் தந்த ஆசிரியரவர்கட்கு எம் உளமுவந்த நன்றி. இம் மாண்பு மிக்க அரும்பெறல் நூலை மாணவர் களும் ஆசிரியப் பெருமக்களும் நாட்டன்பர்களும் மொழிகலங் காண்பாரும் வாங்கிக் கற்றுப் பெரும் பயன் பெறுவார்களென நம்புகின்ருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.