பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் காந்தியடிகள் நட்பு 5} உலகில் நீலச்சாயம் கிடைப்பது அருமையாக இருந்தத ஒலும், இந்திய லேச்சாயத்திற்குப் பிற நாடுகளில் நல்ல திலே கிடைத்திதலுைம் அவுரிச் சாகுபடியை ஆங்கிலேயர் பெரிதும் வற்புறுத்தினர். ஓர் ஏக்கர் நிலத்தில் அவுரி யைப் பயிர் செய்தால் உழவனுக்குப் பத்து ரூபாய்கட்கு மேல் கிடையாது. இம் முறையை எவரேனும் எதிர்த் தால் அவருக்குத் தண்டனை கொடுக்க ஆங்கில அரசாங் கம் தயங்குவதில்லை. அவ் ஏழை உழவர்கட்குப் பரிந்து பேசுபவர் அரியர். அதல்ை அவர்களுடைய துயரங்கள் நாளுக்குநாள் பெருகி வந்தன. இதனைத் தேசத் தலைவர் கள் தெரிந்தார்கள். 1916-ஆம் ஆண்டில் இலட்சுமணபுரி நகரில் காங்கிர சுப் பேரவை கூடியது. அப் பேரவை மாநாட்டில் சம்ப ரான் மாவட்ட அவுரி விவசாயிகளின் துயரை அகற்ற வேண்டும்; அதற்கான அறப்போரைத் தொடங்கவேண் டும்” என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனே சம்பரான் மாவட்ட உழவர்களின் கிலேமையை ஆராயக் காந்தியடிகள் விரைந்து புறப்பட்டார். அவரு டன் அம் மாவட்டத்தைச் சேர்ந்த இராசகுமார சுக்லா என்பவரும் சென்ருர், அப்போதுதான் இராசேந்திரர் முதன் முதல் காந்தியடிகளைக் கண்டார். அன்று முதல் காந்தியடிகளின் சிறந்த தோழராய்த் திகழ்ந்து உலகறிய விளங்கத் தொடங்கினர். காந்தியடிகள் சம்பரான் மாவட்டத்தில் உழவர்கள் பொருட்டுப் பணியாற்றும் காலத்தில் இராசேந்திரர் அவருக்கு அரும்பெறல் துணை வராய் இருந்தார். அவரே அவ் அறப்போரின் படைத் தலைவராயும் ஆய்வுரை கூ றும் நல்லமைச்சராயும் விளங் கினர்.