பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. ஏழைகளின் ஊழியர் இராசேந்திரர் இலட்சுமணபுரியில் நடைபெற்ற க | ங் கி ர சுப் பேரவை மாகாட்டு முடிவின்படி காந்தியடிகள் சம்பரான் மாவட்ட உழவர்களின் உறுதுயரை அகற்றப் புறப்பட்டார். அம் மாவட்டத்தைச் சேர்ந்த இராச குமார சுக்லா என்பவர் காந்தியடிகளைத் தம்முடன் அழைத்துச் சென்ருர், அவரும் ஏழைமக்களிடம் பேரன்பு பூண்டவர். அவருடைய இன்னல்களைக் களைவ தற்கு முன்னின்று பணிபுரிந்தவர். - இராசகுமார சுக்லா, காந்தியடிகளே அழைத்து வருகிருர் என்ற செய்தியை அறிந்த ஆங்கிலேயக் குத்த கைக்காரர்கள் அவர்மீது மிகுந்த ஆத்திரம் கொண் டார்கள். அவருடைய வீடு வாயில்களையெல்லாம் கெருப்பிற்கு இரையாக்கினர். அது கண்டு இராசகுமார அக்லா உளங் தளரவில்லை. அவர்கள் இருவரும் முதலில் பாடலிபுரத்தை அடைந்தனர். அங்ககளில் செல்வாக் குடைய பெரிய மனிதர் யார் என்று பலரிடமும் கேட்டு அறிந்தனர். இராசேந்திரரே பாடலிபுரத்தில் எவரும் விரும்பும் பெருமகனக விளங்குவதைத் தெரிந்து அவருடைய வீட்டை அடைந்தனர். அப்போது இராசேந்திரர் தம் குடும்பத்துடன் வேற்றுாருக்குச் சென்றிருந்தார். அவர் வீட்டில் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். அங்குக் காந்தியடிகள் சிறிது நேரம் தங்கி இளைப்பாறினர். பிறகு, கிணற்றில் நீர் இறைத்துக் கால்கைகளைக் கழுவிக் கொள்ள முயன்ருர் அவரை இன்னர் என்று அறியாத வேலேயாட்கள் கிணற்றில் நீர் எடுக்காதவாறு தடுத்து