பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழைகளின் ஊழியர் இராசேந்திரர் 53 விட்டனர். காந்தியடிகள் அது கண்டு வருந்தவில்லை; புன்னகை பூத்து கின்ருர், பின்னர்க் காந்தியடிகள் சம்பரான் நோக்கிச் சென்ருர், அவர் அங்கு வந்துள்ள செய்தி விரைவில் எங்கும் பரவியது. உழவர்கள் எல்லோரும் ஊக்கமும் துணிவும் கொண்டு காந்தியடிகளைக் காண வந்தார்கள். அவரை நெருங்கித் தங்கள் குறைகளேயெல்லாம் விளக்க மாக எடுத்தியம்பி முறையிட்டார்கள். ஆங்கிலேயக் குத்தகைக்காரர்கள் அவர்கட்கு விளக்கும் அல்லல்களே யெல்லாம் சொல்லக் கேட்டுக் கண்ணிர் சொரிந்தார் காந்தியடிகள். உழவர்கள் கூறிய குறைகளை யெல்லாம் தொண்டர்கள் குறித்துக் கொண்டார்கள். இக் கிகழ்ச்சியைப்பற்றி அறிந்த ஆங்கிலேயக் குத்த கைக்காரர்கட்கு அடிவயிற்றில் இடி விழுந்ததுபோல் இருந்தது. காம் உழவர்க்கு இழைத்த தீங்குகள் எல்லாம் வெளியாய் விட்டனவே என்று சீறினர்கள். சம்பரான் மாவட்டத்தில் உழவர்களிடையே அமைதியில்லை; குழப்பம் பெருகிவிட்டது.” என்று அரசாங்க அதிகாரி களுக்குத் தந்தி கொடுத்தார்கள். "சம்பரான் மாவட் டத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும்,” என்று காந்தியடிகளுக்கு மாவட்டத் தண்டல் அதிகாரியின் கண்டிப்பான ஆணை பிறந்தது. காந்தியடிகளோ "நான் வந்த காரியத்தை முடித்த பின்பே இவ்விடத்தை விட்டு நீங்குவேன்,' என்று உறுதியாகச் சொல்லி அங்கேயே உறைந்தார். உடனே காந்தியடிகள் சிறை செய்யப் பட்டார். அவர்மீது ஆங்கிலேயர்கள் வழக்குத் தொடர்ந்தனர். -