பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழைகளின் ஊழியர் இராசேந்திரர் 55, தெரிவித்தனர். அதனை ஆதாரமாகக் கொண்டு, பீகார் மாகாண அரசாங்கத்தில் உழவர் துயரகற்றச் சட்டம் ஒன்று தோன்றியது. அதல்ை ஏழை உழவர்கள் தம் குறைகள் பல நீங்கி ஓரளவு ஆறுதலுற்றனர். இங்ஙனம் காந்தியடிகள் சம்பரானில் நிகழ்த்திய கன்னிப் போரில் முதலிலிருந்து இறுதிவரை உறுதி யான உள்ளத்துடன் கின்று உதவியவர் இராசேந்திரர். காந்தியடிகளே தமது வரலாற்றில் இராசேந்திரரின் இணையற்ற தொண்டையும் அன்பையும் பண்பையும் வியந்து பாராட்டியுள்ளார். இராசேந்திரருடைய உதவி இல்லாது போனல் சம்பரான் அறப்போரில் வெற்றி கண்டிருக்க முடியாது என்று விளக்கமாகக் கூறுகிரு.ர். அவருடைய தோழர்களும் அவரைப்போல் எந்த நேரமும் துணையாக நின்று பணிபுரிந்தனர் என்று குறிப் பிட்டுள்ளார். காந்தியடிகள் சம்பரான் மாவட்டத்தில் இராசேக் திரரின் இனிய துணையுடன் ஆற்றிய அருந்தொண்டால் அவுரிச் சாகுபடி அடியோடு ஒழிந்தது. நீலச் சாயம் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகள் மறைந்தன. அங்குள்ள உழவர்கள் அனேவரும் உற்சாகமுடனும் தன் மதிப்புடனும் வாழத் தொடங்கினர். அவ் ஏழை உழவர் களின் பொருட்டு உழைத்த தொண்டர்கள் பலரும் உயர்ந்த தேசத் தொண்டர்களாய் ஒளி வீசினர். இப்போது பீகார் மாகாணத்தில் அமைச்சர்களாயும் காங்கிரசுத் தலைவர்களாயும் மக்கள் தலைவர்களாயும் விளங்குவோரெல்லாம் அன்று இராசேந்திரருடன் பணி புரிந்த தொண்டர்களே. 1985-ஆம் ஆண்டில் காங்கிரசுக் கட்சியினர் மாகாண அமைச்சர் அவையை அமைத்த