பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முதல் குடியரசுத் தலைவர் போது, இராசேந்திரர் சம்பரான் மாவட்டத்தில் தம்முடன் உழைத்த தொண்டர்களேயே அமைச்சர்க ளக்கி மகிழ்ந்தார். ஏழை உழவர்கட்குத் தொண்டு புரியத் தொடங்கிய காளமுதல் இராசேந்திரர் மிகவும் எளிய வாழ்வை மேற்கொண்டார். அவர்கட்கு உழைப்பதே அளவிலா இன்பமென்றும் பிறவிப் பயன் என்றும் கருதினர். காந்தியடிகளின் அறவுரைகளைக் கேட்டதில் ஆவல் கொண்டார். வீட்டிலுள்ள வேலையாளரை யெல்லாம் விலக்கி எல்லா வேலேகளையும் தாமே செய்து கொண்டார். சிற்றுார்களே யெல்லாம் சீர்திருத்தும் சீரிய பணியில் பேரூக்கம் கொண்டார். இராசேந்திரரின் கிராமச் சீர்திருத்தப் பணிகளால் பீகார் மாகாணத்திலுள்ள எல்லாக் கிராமங்களிலும் பள்ளிகள் தோன்றின. மருத்துவ வசதிகள் கிடைத்தன. எங்கும் நூல்கிலேயங்களும் படிப்பகங்களும் நிறுவப் பட்டன. இவற்றையெல்லாம் ஆங்காங்கு இருந்த காங்கிரசுத் தொண்டர்கள் கண்காணித்து வந்தனர். இங்கனம் ஏழைமக்கட்குப் பல நலங்களை உண்டு பண்ணிய இராசேந்திரரை 'ஏழைகளின் ஊழியர் நீடு வாழ்க!” என்று மக்கள் அனைவரும் சித்தலும் வாழ்த் தினர்.