பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு. பீகார்காந்தி இராசேந்திரர் நாட்டிற்குப் பணி புரிய வேண்டும் என்ற நல்லெண் னம் எல்லோருக்கும் எளிதில் அமைவதன்று. முன் னேத் தவமுடையார்க்கே அப் பொன் போன்ற உள்ளம் பூக்கும். கட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம்’ என்று பேசுவர் அறிவுடையோர். நட்பு, அருள், கொடையுள்ளம் ஆகிய பண்புகளின் முதிர்ச்சியே நாட்டுப் பணியென்று நவிலலாம். இத்தகைய பண்பு, இராசேந்திரருக்குப் பிறவியிலேயே அமைந்துவிட்டது. இராசேந்திரர் பிள்ளைப்பருவத்திலேயே எல் லோரிடத்தும் பேரன்புடன் பழகுவார். பிறருக்கு உதவி புரிவதில் பெருவிருப்புடன் முன்நிற்பார். அவர் மாணவராக இருக்கும்போது கல்கத்தாவில் மாணவர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் வாயிலாகப் பீகார் மாணவர் நலனைப் பேணி வந்தார். கல்கத்தா நகரில் 1906-ஆம் ஆண்டில் நடைபெற்ற காங்கிரசுப் பேரவைத் தொண்டர் படையில் கலந்து சிறந்த பணிபுரிந்தார். அப் பேரவை மாநாட்டிற்குத் தாதாபாய் நெளரோஜி என்பார் தலைமை தாங்கினர். அவருடைய அரிய பேருரையினையும் பிற தலைவர்களின் உரைகளையும் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்தார். அன்றே காங்கிரசில் உறுப்பினராக விருப்புடன் சேர்ந்தார். அதுமுதல் காங்கிரசுக் கூட்டங்களில் தவருமல் கலந்து கொள்வார். பிற மாணவர்களேயும் தம்முடன் அழைத்துச் சென் து தேசிய உணர்ச்சியை ஊட்டுவார். கல்கத்தாவில் கூடிய காங்கிரசுப் பேரவையில் சுதந்திரம் பெறுவதே காங்கிரசின் முக்கிய நோக்கமென