பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முதல் குடியரசுத் தலைவர் முதன்முதல் முடிவாயிற்று. இந்திய மக்களிடையே சுதந்திர உணர்ச்சியைப் பரப்புதற்குத் தேசியக் கல்விழை இளைஞர்க்கு ஊட்ட வேண்டும் உள் காட்டுப் பொருள் களேயும் ஆடைகளையுமே மக்கள் வாங்கி உபயோகிக்கு அயல்நாட்டுப் பொருள்களேயெல்லாம் து அகற்றுதல் வேண்டும் என்ற முடிவுகள் ப்யப்பட்டன. பேரவையில் கிறைவேற்றிய முடிவுகளையெல்லாம் தமது உள்ளத்தில் நன்கு பதித்த இராசேந்திரர் அவற் றைத் தாம் செல்லும் இடமெல்லாம் விளக்கிச் சொல்லுவார். அவர் அம் முடிவுகளை ஏற்றுச் செயலிலும் சிறிதும் பிறழாது மேற்கொண்டு ஒழுகுவார். சுதந்திர வேட்கையுடன் இங்ங்னம் சொல்லிலும் செயலிலும் ஒத்து நடக்கும் உத்தம மாணவரை உலகில் காண்பது அரிது. இத்தகைய மாணவர் இராசேந்திரரை அமெரிக்க நாட்டுச் சகோதரி நிவேதிதா தேவி என்பார் ஒருகால் காணநேர்ந்தது

بيعي பாரத நாட்டின் சீரிய தத்துவ ஞானியாகிய விவேகானந்தர் அமெரிக்க காட்டில் நடைபெற்ற உலகச் சமய மாநாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவர் இந்து சமயத்தைப் பற்றி ஆற்றிய அரிய சமயப் பேருரை பன்னுட்டுச் சமயத் தலைவர்களின் உள்ளத்தையும் ஒருங்கு கவர்ந்தது. அவரது சொல்வன்மையிலும் இந்து சமய உண்மைகளிலும் பற்றுக் கொண்ட பலர் இந்திய நாடு புகுந்து அவரால் கிறுவப்பெற்ற இராம கிருஷ்ண மடத்தில் சேர்ந்து சமய உண்மைகளை ஆய்க் தனர். அங்ங்னம் அமெரிக்க நாட்டிலிருந்து இக் நாடு புகுந்த அருமைச் சகோதரி நிவேதிதா தேவி என்பார்