பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீகார்காந்தி இராசேந்திரர் 59. இராசேந்திரரைச் சந்தித்தபொழுது அவருடைய தோற் றம், ஏற்றம், ஆற்றல் முதலியவற்றைக் கண்டு மிகவும் பாராட்டினர். 'இவ் விளைஞன் பிற்காலத்தில் இப் பாரதப் பெருநாட்டின் தலைவனுகத் திகழ்வான்; உள்ளத் துறவு பூண்ட உத்தமனுயும் ஒளிர்வான்’ என்று வாயார வாழ்த்தினர். சமய நம்பிக்கையுடைய அச் சகோதரியின் வாக்குப் பலித்துவிட்டதை இன்று கண்கூடாகக் காண்கின்ருேம். தேசத் தலைவர்களின் சுதந்திரக் கிளர்ச்சியை அடக்குவதற்கு 1919-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ரெளலட் சட்டத்தைக் கொண்டு வந்தனர். அச் சட்டத் தின் கொடுமையைக் கண்ட காந்தியடிகள் சத்தியாக் கிரக இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவ் இயக்கத்தில் கலந்து தொண்டாற்ற உறுதி கொண்ட இராசேந்திரர், பீகார் மாகாணம் முழுதும் சுற்றி அவ் இயக்கம் வலுக்குமாறு செய்தார். அதனுல் அம் மாகாணத்தி லுள்ள பெருமக்கள் பலர் அப் புதிய இயக்கத்தில் புகுந்தனர். பிற மாகாணங்களிலும் அவ் இயக்கம் பரவி வளரத் தலைப்பட்டது. அது கண்ட ஆங்கில அதிகாரிகள் பெரிதும் அஞ்சினர். அப்பொழுது பஞ்சாப் மாகாணத்தில் கவர்னராக இருந்த ஆங்கிலேயர் ஆத்திரம் கொண்டு மக்களேக் கொடுங்கோன்மையாக கடத்தினர். அங்குள்ள அமிர்த சரஸ் நகரில் ஒரு தோட்டத்தில் அமைதியுடன் கூடியிருந்த மக்களை ஆங்கிலப் படைத் தலைவர் டயர் என்பார் துப்பாக்கியால் சுட்டார். அதனுல் அங்கிருந்த மக்களில் பலர் உயிரிழந்தனர். இதைத்தான் பஞ்சாப் படுகொலை என்று பகர்வர். இந் நிகழ்ச்சியைப் பற்றிக்