பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒{} முதல் குடியரசுத் தலைவர் கேள்வியற்ற காட்டுமக்கள் உள்ளம் கொதித்தனர். ஆங்கில ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பெருங்கிளர்ச்சி செய்ய முனைந்தனர். பீகார் மக்களின் உள்ளத்தில் பொங்கிய பேருணர்ச் சியைக் கண்டு இராசேந்திரர் பாது நேருமோ என்று அஞ்சினர். காந்தியடிகள் காட்டிய அறநெறியில் சென்றே ஆங்கிலேயரை அகற்ற வேண்டும் என்று பிகசர் மாகாணத்தின் பல இடங்களிலும் சென்று நல் லுரை பகர்ந்தார். எங்கும் அமைதியும் அன்பும் நிலவுமாறு செய்தார். இங்ஙனம் காந்தியடிகள் தோற்றிய சாக்தமான அறநெறியை நாடெங்கும் பரப்பி வந்த இராசேந்திரரைப் பீகார்காந்தி’ என்று எல்லோரும் கரவாரத் துதித்தனர். ககா. இராசேந்திரர் மேலேநாட்டுப் பயணம் இராசேந்திரர் ஒத்துழையா இயக்கத்தில் தமது உள்ளத்தையெல்லாம் செலுத்தத் தொடங்கியவுடன் வழக்கறிஞர் தொழிலேக் கைவிட்டார் மாதம் ஒன்றிற்கு ஐயாயிரம் ரூபாய்கட்குமேல் வருமானம் வந்த அத் தொழிலே நாட்டுப் பணியின் காரணமாக அவர் கைவிட்டாரெனின் அவரது தியாகத்தை என்னென்பது! தேச நலத்தில் அவர் திருவுள்ளம்) எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தது என்பது இதனுல் விளங்குமன்ருே ! அவர் வழக்கறிஞர் தொழிலக் கைவிடுகையில் அவர் ஏற்று கடத்திய பெருவழக்கொன்று முடிவுருது இருந்தது. அவ் வழக்கைப் பற்றிய நுட்பங்களேயெல் லாம் திட்பமுறத் தெரிந்த அவர் அதனேக் கைவிட்டால்