பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்து ரை பாரத நாட்டிற்கே உரிய பழமையான பண் பாட்டின் உயர்ந்த சின்னங்கள் தொண்டு, தியாகம் என்ற இரண்டுமாகும். இவ் இரண்டு அரிய பண்புகளையும் தம் வாழ்வில் கடைப் பிடித்தொழுகிய தலைவர் பெருமக்கள் பலரைப் பெற்றது. நம் பாரத நாடு. அத்தகைய தலைவர் களின் வரிசையில் இவ் இருபதாம் நாற்ருண்டில் முதல்வராகக் கொண்டு போற்றும் தனிப்பெருங் தலைவர் மகாத்துமா காந்தியடிகளாவர். அவருக்கு அடுத்தபடியில் வைத்தி எண்ணத்தக்க அருமை யும் பெருமையும் இன்றைய பாாகக் குடியரசுத் தலைவராகிய இராசேந்திரருக்கே உண்டு. இர்ாசேந்திரர் அறிவு, ஆற்றல், தொண்டு, தியாகம் முதலிய அனைத்திலும் இன்று இணை யற்று விளங்கும் தலைவர். அவருடைய அளப் பரிய சிறப்பினை அறிந்த நம் நாட்டு அரசியல் தலைவர்கள் குடியரசு பெற்ற பாரத நாட்டிற்கு முதல் தலைவராக அவரைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இங்ஙனம் பாரதக் குடியரசின் முதல் தலைவராக முதன்மை பெற்று விளங்கும் இராசேந்திரரின் வரலாற்றைப் பாரத நாட்டில் பிறக்கும் பேறுபெற்ற ஒவ்வொருவரும் செவ்வை யாகத் தெரிந்திருக்க வேண்டுவது இன்றியமை யாததாகும்.