பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் மேலைநாட்டுப் பயணம் 63. வழக்காளர் பெரும் தொல்லைக்கு உள்ளாவர் என்று எண்ணினர். ஆதலின் அவ் வழக்கு ஒன்றற்கு மட்டும் நீதிமன்றத்திற்குச் செல்லும் உரிமை பெற்றிருந்தார். அவ் வழக்கு 1988-ஆம் ஆண்டில் இங்கிலாந்து நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன் பொருட்டு இராசேந்திரர் இங்கிலாந்துக்குச் சென்ருர், அவ் வழக்கு வெற்றியடைவதற்கு வேண்டிய உதவிகளையெல்லாம் நன்கு செய்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டின் பல நகரங்களையும் சென்று கண்டுகளித்தார். அவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் இந்திய நாட்டைப் பற்றிப் பல சொற்பொழிவுகள் ஆற்றினர். தம்மைச் சந்தித்த அரசியல் தலைவர்களிடம் காங்கிரசுக் கட்சியைப் பற்றி விளக்கி உரைத்தார். அவர்கள் காங்கிரசின்மீது கொண்டிருந்த தவருன கருத்துக்களே எல்லாம் போக்கினர். பின்பு இராசேந்திரர் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்தார். அவர் தம் பயணத்தின்போது ஐரோப்பாவில் சிறந்த ஞானியாக விளங்கிய ரோமன் ரோலண் டு என்பாரைக் கண்டு பேசும் பேறு பெற்ருர். அங்குச் சர்வதேச இளைஞர் மாநாடு ஒன்று நடைபெற்றது. அம் மாநாட்டு அமைப்பாளர் இராசேந்திரரை அதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைத்தனர். அங்ங்னமே அவர் அம் மாநாட்டில் கலந்து மகிழ்ந்தார். , so ஆஸ்திரியா நாட்டிலுள்ள வியன்ன நகரில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. உலகில் போரே நிகழக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் அம் மாநாடு கூட்டப்பெற்றது. அதில் இராசேந்திரர்