பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முதல் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்புக் கிட்டியது. காந்தி யடிகள் காட்டிய சத்தியம், அகிம்சை முதலிய அறங் களத் திறம்பட அம் மாநாட்டில் எடுத்து விளக்கினர். அன்பின் ஆற்றலேத் தெளிவுற விளக்கினர். மக்கள், விலங்குகளைப்போல் அறிவிழந்து ஒருவரை யொருவர் தாக்கிக் குருதி வெள்ளம் பெருகியோடுமாறு போர் புரிதல் தகாது என்று இடித்துரைத்தார். வியன்ன மாகாட்டில் வீராவேசம் படைத்த சிலர் வீற்றிருந்தனர். அவர்கள் டோர்வெறி கொண்ட புன்மை யுள்ளத்தினர். இராசேந்திரரின் இனிய அற வுரைகள் அவர்கட்குப் பெரிதும் ஆத்திரத்தை மூட்டின. உடனே அவர்கள் வெகுண்டெழுந்து வெறிபிடித்தவர் களைப்போல் இராசேந்திரரைத் தாக்கிப் புண்படுத்தினர். அதனுல் டம்பில் பல காயங்கள் அடைந்த இராசேக் திரர் ஒரு திங்களுக்குமேல் அங்கு மருத்துவச் சாலையில் தங்கிச் சிகிச்சை பெற்ருர். அதன் பின்னும் ஐரோப்பா வில் பல இடங்களில் அகிம்சையின் தத்துவத்தைப் பற்றி அரிய விரிவுரைகள் ஆற்றினர். இராசேந்திரர் மேலே நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த நாட்களில் அந் நாட்டு நடை உடைகளே விரும்ப வில்லை. இந்திய நாட்டில் இருப்பது போலவே எங்கும் கதராடையும் கதர்க் குல்லாவும் அணிந்து சென்ருர், அவரது தோற்றத்தைக் கண்ட சிலர் எள்ளி நகையாடி னர். அவர், தமது உடை கடைகளேக் கண்டு இகழ்ந்த அவ் அயல் நாட்டினர்க்குக் கதராடையின் பெருமையை விளக்கி உரைத்தார். இடையில் எகிப்து நாட்டிற்கும் சென்று திரும்பினர். அங்கும் காந்தியக் கொள்கை களைப் பற்றிப் பலர்க்கும் எடுத்துரைத்தார்.