பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமவீரர் இராசேந்திரர் 63. இங்ங்னம் மேலே நாடுகளில் பயணம் செய்த காலத் தில் ஆராய்ந்து தொகுத்த அரிய கருத்துக்களையெல் ஒாம் ஒன்று சேர்த்துக் கதரின் மகத்துவம், காந்திய தத்துவம் என்ற நூல்களாக வெளியிட்டார். அந் நூல் இ%ளக் கண்ட காந்தியடிகளும் காங்கிரசுத் தலைவர்களும் வியந்து மகிழ்ந்து இயந்து பாராட்டினர். -ബാ கன. தருமவீரர் இராசேந்திரர் போரை, அறப்போர் என்றும் மறப்போர் என்றும் இருவகையாகப் பிரிப்பர். உலகில் பல பாகங்களிலும் இதுவரை நடைபெற்ற போர்கள் எல்லாம் மறப்போர் களே. வன்னெஞ்சமுடைய மக்கள் பழி பாவங்கட்கு அஞ்சாது உயிர்களேக் கொன்று குவிக்கும் கொடும் போரே மறப்போர் என்று குறிக்கப்படும். அன்பின் அடிப்படையில் பிறர் செய்யும் துன்பத்தை யெல்லாம் பொறுமையுடன் ஏற்றுத் ைேமகள் அகலுமாறு இறை வனே வேண்டி நிற்பதே அறப்போர் முறையாகும். இத்தகைய அறப்போர் முறையை உருவாக்கி அதலுைம் பகையை வெல்லலாம் என்று உலகிற்குக் காட்டிய உத்தமர் காந்தியடிகளாவார். பாரத நாடு சுதந்திரம் பெறுதற்குக் காந்தியடிகள் இத்தகைய அறப் போரையே மேற்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். 1980-ஆம் ஆண்டில் சுதந்திரப் போர் தொடங்கியது. இராசேந்திரர் பீகார் மாகாணம் எங்கும் சுற்றி அப் போருக்கு ஆயிரக்கணக்கான தரும வீரர்களைத் திரட்டி னர். சுதந்திர இயக்கம் வலிமை பெற்று வருவது கண்டு ஆங்கில அரசாங்கம் அஞ்சியது. மாகாணத்தின்