பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

链结 முதல் குடியரசுத் தலைவர் மாபெருந் தலைவராகிய இராசேந்திரரைச் சிறை செய் தால் காட்டில் பெருங்குழப்பம் ஏற்படும் என்று எண்ணி வாளா இருக்தது. 1980-ஆம் ஆண்டில் காந்தியடிகள் உப்பு அறப் போரைத் தொடங்கினர். உலகம் என்றுமே கண்டிராத இவ் உப்பு அறப்போரைக் கண்டு ஆங்கில அரசாங்கம் அடக்குமுறைக் கொடுமைகளே அளவின்றிச் செய்தது. அதைக்கண்ட இராசேந்திரர் இவ் உப்புப் போர் நாடெங் கும் ஓங்கி நடைபெறுமாறு பெருங்கிளர்ச்சி செய்தார். அப்பொழுது அரசாங்கம் இராசேந்திரரைச் சிறை செய்து ஆறு மாதம் காவலில் வைத்தது. அதை அறிந்த இந்திய மக்கள் ஆத்திரம் கொண்டனர். அச் சமயத்தில் அலகபாத் நகரினின்று வெளியாகும் லீடர்” என்னும் செய்தித்தாள் பெரிதும் வருந்தி எழுதியது. "பீகார் மாகாண மக்களுக்கு இராசேந்திரர் தெய்வம் போன்றவர். இந்திய மக்கள் அவரிடத்துப் பெருமதிப் புடையவர்கள். அவர் தங்கலம் கருதாத் தகைமையர். ஏழைகட்கு உதவும் இனியர். இத்தகைய உயர்ந்த பண்பு களால் மக்கள் உள்ளத்தில் தக்க இடம் பெற்றவர். காந்தியடிகளின் மிகுந்த அன்பிற்குப் பாத்திரமான அரிய தொண்டர். மனம், மொழி, மெய் ஆகிய மூன்றிலும் காந்தியடிகளைப் போன்றே விளங்கும் சாந்தவடிவினர். காந்தியடிகள் காட்டிய அகிம்சையாகிய அறநெறியில் பிறழாது பீகார் மக்கள் செல்லுமாறு செய்து வரும் சிறந்த தரும வீரர் அவ் இராசேந்திரர். காங்கிரசுத் தொண்டரெல்லாம் பாங்குடைய அன்புநெறியில் பணி செய்ய வழிகாட்டி கிற்கும் வள்ளல் அவர். இத்தகைய தருமவீரரைச் சிறையில் அடைப்பதால் அரசாங்கத் திற்கே பெருங்கேடுகள் விளையும். பொதுமக்களுக்கு