பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமவீரர் இராசேந்திரர் 65 அவ் அரசாங்கத்தின் மீது அன்போ நம்பிக்கையோ அணுவளவும் பிறக்காது.” இங்ஙனம் அப் பத்திரிகை இடித்து எழுதிய செய்தி யைக் கண்டும் அரசாங்கம் இராசேந்திரரை விடுதலை செய்யாதிருந்தது. பின்னர் 1983-ஆம் ஆண்டிலும் மீண்டும் அவரைச் சிறையில் தள்ளியது. அப்போது அவர் உடம்போடு பிறந்து வளர்ந்துவந்த காசநோய் பெரிதும் அவரை வருத்தத் தொடங்கியது. அரசாங்கம் அவருக்கு எத்தனேயோ சிகிச்சைகளேச் செய்தது. ஆறு மாத காலம் சிறையிலிருந்து பின்னர் வெளிவந்தார். இராசேந்திரர் திரும்பவும் அறப்போரில் இறங்கி ஞர். அதனல் மூன்ருவது முறையாக அவரைச் சிறை யில் தள்ளியது அரசாங்கம். அப்பொழுது பதினேந்து மாதங்கள் சிறையில் கிடந்து வருந்தினர். அந் நாட்களி லும் அவர் காச நோயால் அடைந்த இன்னலுக்கு ஒர் எல்லேயில்லை. இங்ங்னம் இராசேந்திரர் காட்டின் நலங் கருதி மூன்று முறை சிறை புகுந்து வாட்டமடைந்தார். அவர் தாம் இருந்த சிறைக் கூடத்தைத் தவக்கூடமாகக் கருதிப் பாரதநாடு சுதந்திரம் அடையப் பெருந்தவம் புரிந்தார். அவர் இந்திமொழியில் ' தேசம் ' என்ருெரு பத்திரிகை நடத்தினர். அதில் ஒத்துழையா இயக்கத்தின் உயர்வு, அகிம்சையைப்பற்றிய அரிய உண்மைகள் ஆகிய வற்றை அழகுற எழுதி வெளியிட்டார். அதனே மக்கள் படிப்பதால் அரசாங்கத்திற்குக் கேடுவிளையும் என்று அஞ்சி அப்போதிருந்த ஆங்கில அரசு தடைசெய்தது. இங் நனம் பலவகையாலும் சுதந்திர உணர்ச்சியைப் பரப்பி வந்த இராசேந்திரர் இணையற்ற தருமவீரர் அன்ருே ! மு. கு. த.-5