பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. இராசேந்திரரின் பூகம்பப் பணி விஞ்ஞான வளர்ச்சி வியத்தகு முறையில் பெருகி. யுள்ள இவ் இருபதாம் நூற்ருண்டில் மனிதனுக்கு இயலாத காரியம் எதுவும் இல்லே என்று வீரியம் பேசு கின்றனர் மக்கள். மனிதன் சுத்துணேப் பேராற்றலைப் பெற்ருலும் இயற்கையை வெற்றிகொள்ள அவளுல் இயலாது. அவ் இயற்கையைத்தான் தெய்வ சக்தி என்று நம் முன்னேர் போற்றினர். அவ் இயற்கை சில சமயங்களில் கினைத்தற்கரிய பெரிய கொடுமைகளே விளேத்தலும் உண்டு. 1934-ஆம் ஆண்டு, சனவரித் திங்கள் பதினேந்தாம் நாள் பீகார் மாகாணத்தில் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. திடீரென்று நிலம் படிரென வெடித்தது. பெரிய மாட மாளிகை களும் கூட கோபுரங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைக்தொழிந்தன. சில இடங்களில் வீடுகள் சிதறுண்டு வீழ்ந்தன. வேறு சில இடங்களில் வெள்ளம் பெருக் கெடுத்து ஊரையே அள்ளிக்கொண்டு ஓடியது. இன்னும் சில இடங்களில் எங்கும் ஒரே மணற்காடு பரவியது. எண்ணில்லாத பொருள்கள் மண்ளுேடு மண்ணுய் மட்கிப் போயின. மக்களும் ஆடு மாடுகளுமாக இறக் தொழிந்த உயிர்களுக்கு எண்ணிக்கையே கிடையாது. இத்தகைய கொடிய நிலநடுக்கத்தால் பல்லாயிர மக்கள் வீடிழந்து பொருள் இழந்து அலமந்தனர். ஐம் பெரும் பூதங்களும் தலேதடுமாறினவோ என்று மக்கள் நிலை கலங்கினர். இயற்கையின் விளைவுக்கு என் செய் வது என்று எங்கித் துடித்தனர் சிலர். முன் செய்த தீவினைப் பயனே இது” என்று மொழிந்தார் காந்தியடி