பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் பூகம்பப் பணி 67 கள். "இஃது இயற்கையின் விளையாட்டு” என்று சொல்லி இரங்கினர் கவியரசர் தாகூர், இங்ஙனம் எல்லோரும் உள்ளக் தடுமாறிக் கொண் டிருக்கும் சமயத்தில்,"பீகார் மாகாணத்தின் பெருக்தலே வராகிய இராசேந்திரர் சிறையில் கிடந்து வருந்துகிருர், தாயகனய தயாளர் இப்போது வெளியில் இல்லைய்ே!” என்று ஏங்கினர் பீகார் மக்கள். அவர் விடுதலையடைய இன்னும் ஒரு திங்களே இருந்தது. பூகம்பத்தால் பேரழிவுற்ற பீகார் மாகாண மக்களின் பெருந்துயரை இராசேந்திரர் தெரிந்தார். ஐயோ! இத்தகைய துன்பக் காலத்தில் மக்களுக்குத் தொண்டாற்ற முடியாது சிறைக் குள் அகப்பட்டுக் கொண்டோமே!’ என்று சிங்தை ருைந்துருகினர். அவரது உடலோடு ஒட்டிய காசநோயும் அப்போது அவரைப் பெரிதும் வருத்தியது. பீகார் மாகாணம் பூகம்பத்தால் அழிவுற்றிருக்கும் இச் சமயத்தில் சிறையுள் இருக்கும் இராசேந்திரருக்கு ஏதும் கேடு நேர்ந்தால் நாடு எங்கிலேயுறுமோ என்று அஞ்சியது ஆங்கில அரசாங்கம். இக் கிலேயில் தேசத் தலைவர்கள் பலர் இராசேந்திரரை உடனே விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தினர். அவரை இச்சமயம் விடுதலே செய்வதால் பல நலங்கள் விகளயும் என்று அறிந்த அரசாங்கம் அவ்விதமே விடுதலே செய் தது. அவர் விடுதலையான மூன்ரும் நாளிலேயே பூகம்பத் துயர் போக்கும் பணியில் இறங்கினர். பொதுநலம் பேனும் பெருமக்கள் தங்கலத்தைச் சிறிதும் எண்ணமாட்டாரன்ருே ! இராசேந்திரர் காச நோயால் உடல்நலிந்து மெலிந்து வருந்தி இருந்தாரேனும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது தம் மாகாண