பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முதல் குடியரசுத் தலைவர் மக்களின் துயரைப் போக்க விரைந்தார். இராசேந்திரர் விடுதலையடைந்த செய்தி கேட்ட பீகார் மக்கள் அண் வரும் பேருவகை வெள்ளத்தில் மூழ்கினர். வீடு, வாசல், மாடு, மனே, உற்ருர், பெற்ருர், மனைவி, மக்கள் முதலிய வற்றையெல்லாம் இழந்து ஏங்கி நின்ற பலரும், அவரது விடுதலே கேட்டு இனி நம் இன்னல் அகலும் என்று எண்ணி இன்புற்றனர். பூகம்பத்தால் கேடுற்ற மக்களின் துயரத்தை ஒருவாறு போக்க மிகுதியான பொருள் வேண்டும். இராசேந்திரர் அப் பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவை விளக்கி, நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்தார். அவரது அ றிக்கை வெளியான ம5 நாளிலிருந்தே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பணம் வந்து குவியத் தொடங்கியது. பீகார் மக்களின் பெருந் துயரைப் போக்க அரசப் பிரதிநிதியும் அதிகாரிகள் வாயிலாக நிதி திரட்டினர். இராசேந்திரர் திரட்டும் நிதியைக் காட்டினும் அதிகமான நிதியைத் திரட்டுதற்கு அரசாங்கம் பெருமுயற்சி எடுத்தது. அ திகார வல்லமை படைத்த அரசாங்கத்திற்குக் கிடைத்த நிதியின் அள வுக்குக் குறையாமல் இராசேந்திரர் நிதியும் திரண்டது. இராசேந்திரரது இனிய வேண்டுகோளால் ஒன்பது மாத காலத்தில் முப்பது லட்சம் ரூபாய்கட்கு மேல் நிதி திரண்டது. அப் பணத்தைத் துயருற்ற மக்களுக்கு வழங்கும்போது நடுவுநிலை பிறழாது நன்கு ஆராய்ந்தே வழங்கினர். உதவி பெறுவதற்கு உரியவர்கள் எவ் வியல்பினராயினும் அதனைக் கருதாது அவர் துயர் போக்குவதொன்றே குறிக்கோளாகக் கொண்டு உதவி புரிந்தார். இங்கனம் இராசேந்திரர் இயற்றிய அருங்