பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் பூகம்பப் பணி 69 தொண்டினக் கண்ட பெருமக்கள் அனேவரும் அவருக்கு ஆரிய துணையாக கின்று உதவினர். அன்று பீகார் முக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்கியவர் இராசேந்திரரே என்று உறுதியாக உரைக்கலாம். பூகம்பத்தால் துயருற்ற மக்களின் இன்னலத் துடைக்க முன்னின்ற இராசேந்திரரைப் பத்திரிகைகள் பாராட்டி எழுதின. அப்போது கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ் மென்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை, 'பூகம்பத் துயர் போக்க நிதி திரட்டிய புண் னியர் இராசேந்திரர். அவரது வேண்டுகோளே மதித்து, மக்கள் பல லட்சக்கணக்கான பணத்தைக் கொடுத்துள்ளனர். இதனே நோக்கினல் காங்கிரசுத் தொண்டர்களிடம் பொதுமக்களுக்கு அதிகமான நம்பிக்கை உண்டு என்பது நன்ருகப் புலப்படுகின் றது. பூகம்பத்தால் துயருற்ற பீகார் மக்களுக்கு முதன் முதல் உதவுதற்கு முன்வந்த பெருமை இராசேந்திரருக்கே உரியது. அவரைப்போல் மக்க ளின் துயரைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்தவர் எவரும் இலர்.” என்று இராசேந்திரரைப் பாராட்டி எழுதியது. அப் போது கல்கத்தா நகர்மன்றத் தலைவராய் விளங்கிய பாபு சந்தோஷ குமார் என்பார், "பீகார் மாகாணத்தில் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளை நான் நேரிற் சென்று கண்டேன். அங்கெல்லாம் எனது மனக்கண் முன்னுல் தோன்றியவர் இராசேந்திரர் ஒருவரே. அவர் நம் பாரத நாட்டின் சீரிய செல்வம். அவர் காச நோயால் மிகவும் வருந்துபவர். எனினும் மக்களின் துயரைப் போக்க அயராது உழைத்து வருகிருர். இன்று பீகார்