பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 முதல் குடியரசுத் தலைவர் மக்களுக்கு ஆறுதல் அளிக்க அவரினும் சிறந்தார் எவரு மிலர்,” என்று போற்றிப் புகழ்ந்தார். அச் சமயத்தில் காந்தியடிகள், ‘என் துணைவர்க ளாகிய தொண்டர்களுள் இன்று தலைசிறந்தவர் இராசேந்திரர். அரிசன முன்னேற்றப் பணிக்கென்றே இறைவன் என்னேப் படைத்ததாக யான் எண்ணுவது போல, அவரைப் பீகார் பூகம்பத் துயர்போக்கும் பணிக் கென்றே இறைவன் படைத்தான் என்று கருதுகிறேன். அவசியம் நேருமானுல் எந்த நேரத்திலும் அவர் என்னே அழைத்து ஏவல் கொள்ளலாம்,” என்று இராசேந் திரரைப் பாராட்டிப் பத்திரிகைகளில் எழுதினர். இங்ங்ணம் பெருமக்கள் பலரும் புகழுமாறு பூகம்பப் பணிபுரிந்த புனிதமான தொண்டர் இராசேந்திரர். கக,ை இராட்டிரபதி இராசேந்திரர் வானம் மழை பொழிந்து வையகத்தை வளப் படுத்துகிறது. அதற்கு உலகம் என்ன கைம்மாறு செய்ய இயலும் ? அதுபோலவே பெரியோர்கள் பிறர் நலம் பேணுவதைத் தம் கடமையாக மேற்கொண் டுள்ளனர். அவர்கள் எத்தகைய கைம்மாறும் எதிர் நோக்கி உதவி புரிவதில்லே. அங்ஙனம் பயனை எதிர் நோக்காது செய்யும் உதவியின் உயர்வுக்கு உலகமே இணையாகாது என்று உரைப்பர் திருவள்ளுவர். இராசேந்திரர் இளம் பருவ முதலே பிறர்க்கு நலம் புரிவதில் பெருமகிழ்வு கொண்டவர். தம்மால் நலம் பெற்றவர்களின் முகமலர்ச்சியைக் கண்டு அகமகிழ்ச்சி கொண்டவர் இராசேந்திரர். உடல், பொருள், ஆவி