பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராட்டிாபதி இராசேந்திரர் 71. முன்றையும் நாட்டின் கலத்திற்கே உதவி இன்புற்றவர். அவர் அதன் பொருட்டுச் சிறு கைம்மாறும் பெற விரும்பியவரல்லர். அவரது அரிய பொதுநலப் பணியை நாட்டுமக்கள் நன்கு கவ்னித்து வந்தனர். காங்கிரசுத் தலைவர்களும் அவரது பணியில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தனர்; அவரது உண்மையான ஊழியத் திற்குத் தங்கள் நன்றியைக் காட்டும் நாள் என்று வாய்க்குமென எதிர்நோக்கி இருந்தனர். இந்திய மக்கள் இராசேந்திரர்பால் கொண்ட ஒன்று பட்ட அன்பின் பயனுக 1939-ஆம் ஆண்டில் அவரை இராட்டிரபதியாகக் கொள்ளவேண்டும் என்று விழைங் தனர். இதனை உணர்ந்த மாடர்ன் ரிவ்யூ என்ற மாத இதழ், இராசேந்திரரைக் குறித்துத் தனது கருத்தை நாட்டிற்கு அறிவித்தது. “எதிர்காலம் இளைஞர்க்கே உரியது. தற்காலமோ இளைஞர்க்கும் முதியோர்க்கும் உரியது. இளைஞர்களே நாட்டின் எழுச்சிக்கு உரிய அரிய சக்தியை ஊட்டுவர். நாடென்னும் சகடத்தைச் செலுத்துபவன் சிறந்த அறிவும் முதிர்ந்த பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். அங்கனம் இருந்தால்தான் அவனுல் காட்டிற்கு நல்ல பயன் விளையும், மக்களாட்சியை விரும்பும் காலம் இது. இந்நாளில் காட்டுமக்கள் எல்லோருடைய உள்ளத்தை யும் ஒருங்கு கவர்ந்த கல்லானேயே தேசத் தலைமைக்குத் தேர்ந்தெடுத்தல் பொருத்தமாகும். ஆரவாரம் இல்லா மல் அடக்கமாகப் பணிபுரியும் அரிய ஊழியர்களும் நாட்டில் உளர். அவர்கட்கும் நாடு பெருமை யளித்தல் வேண்டும். அடக்கமே உருவாய்ப் பணியே வாழ்வாய்க் கொண்டிருக்கும் இராசேந்திரர் இன்றைய காட்டில் இணையற்ற தலைவர் என்று இயம்பலாம்.'