பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了4 முதல் குடியரசுத் தலைவர் மகிழ்ந்தவர். அவர் அத் தொழிலே விட்டு விலகிச் சுதக் திரப் போரில் இறங்கும் நாளில் அவரிடம் இருபத் தைந்து ரூபாய்களே இருந்தன என்ருல் அவரது அரு ளுள்ளத்தை என்னென்பது! இத்தகைய ஈகை ஒன்றே இணேயற்ற புகழை ஒருவர்க்கு உண்டுபண்ணும். இராசேந்திரர் மாணவராக இருக்கும்போது அவ ருடைய கல்வித் திறமையைக் கண்டு போற்ருத ஆசிரியர் எவரும் இலர். பல்கலைக்கழக மாணவர்கள் இராசேந் திரரைத் தமக்குத் தலைவராகக்கொண்டு, அவர் அடிச் சுவட்டைப் பின்பற்றி கடந்தனர். அவர் மாணவர்களின் ஒற்றுமைக்காகச் சங்கம் கிறுவி, அதன் வாயிலாக ஆற்றிய பணிகளைப் போற்ருதார் இல்லை. அப்பொழுதே அமெரிக்க நாட்டுச் சகோதரியாகிய நிவேதிதாதேவி, இவரது தொண்டு உள்ளத்தையும் தூய அறிவு நலத் தையும் இனிய தோற்றத்தையும் கண்டு, 'இவன் எதிர் காலத்தில் பாரத நாட்டிற்குத் தலைவனவான்,” என்று கெஞ்சாரப் புகழ்ந்து வாழ்த்தினர். - விஞ்ஞானப் பேராசிரியர்களாக உலகப் புகழ் பெற்று விளங்கிய ஆசாரிய பிரபல சந்திர ரே, ஜகதீச சந்திர போசு ஆகிய இருவரிடத்தும் கலேபயிலும் பேறு பெற்ற வர் இராசேந்திரர். அப்பேரறிஞர்கள் இருவரும் இவரது கலேத் திறமையையும் குணப் பெருமையையும் கண்டு மன மகிழ்ந்து கொண்டாடினர். கல்கத்தாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் திகழ்ந்து வந்த ஆகதோஷ் முக்கர்ஜி என்னும் பேரறிஞர், இராசேந்திரரின் இணே யிலாக் கலைகலம் கண்டு வியந்து புகழ்ந்தார். முசபர்பூர் கலாசாலை நிதி வசதியின்றி மூட ளிேடுமோ என்று, அக் கலாசாலை ஆட்சியாளர்கள்