பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரர் பெற்ற இசை 75 அஞ்சியிருந்த வேளையில் இராசேந்திரரைப் பேராசிரிய ராக நியமிக்குமாறு பலரும் அறிவு றுத்தினர். அங்ங்னமே இராசேந்திரர் அக் கலாசாலையில் ஆங்கிலப் பேராசிரியப் பணியை ஏற்றதும் அக் கலாசாலே ஏற்றமும் தோற்ற மும் பெற்று இலங்கியது. அவர் பணியேற்ற சில திங்க ஞக்குள் அக் கலாசாலைக்கு வேண்டிய நிதியைத் திரட்டி வைத்தார். அதனுல் கலாசாலைக்குப் புத்துயிரளித்த சித்தர் என்று இராசேந்திரரை எல்லோரும் ஏத்தினர். அமெரிக்க காட்டு அறிஞருள் ஒருவரான ஜான்கந்தர் என்பார் உலகம் அறிந்த சிறந்த எழுத்தாளர். அவர் ஒருகால் இந்திய காட்டிற்கு வந்தார். இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரையும் தனித்தனியே கண்டு உரையாடி ஞர். அதன் பயனக இந்திய நாட்டைப்பற்றி இனிய தொரு நூலே எழுதினர். அந்நூல் அவரது அறிவு ஆழத் தையும் எழுத்தாற்றலேயும் இனிது விளக்குவதாகும். அந் நூலில் ஜான்கந்தர், இந்தியத் தலைவர்களைப்பற்றிச் சில குறிப்புக்கள் கொடுத்துள்ளார். "இந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் ஒப்பற்ற தலைவர் காந்தியடிகள். அவருக்கு அடுத்த நிலையில் அவரது வலக்கைபோல் விளங்குவோர் மூவர். அம் மூன்று பேர்களுள் திலகம் போன்றவர் இராசேந்திரரே. அம் மூவரும் ஒர் உருக்கொண்டால் அவ் உருவத்தின் இதயமாகத் திகழ்பவரும் இராசேந்திரரே. இங்ங்ணம் அவ் அமெரிக்க ஆசிரியர் தம் நூலில் குறித்துள்ளார். பாடலிபுரத்தில் சிறந்த வழக்கறிஞராக இருந்தவர் சச்சிதானந்த சின்கா என்பார். அவர் பீகார் மாகாண அரசாங்கத்தின் ஆட்சிமன்றத்தில் நிதிச்சாலை உறுப் பினராகப் பதவி தாங்கியவர். அவர் இராசேந்திரரை