பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 - முதல் குடியரசுத் தலைவர் இளமை முதல் நன்கு அறிந்தவர். அப் பெரியார் இராசேந் திரரைப் புகழ்ந்துரைக்கும் சொற்கள் பொன்னேபோல் போற்றத் தக்கனவாகும். 'இராசேந்திரர் துறவியரைப் போன்ற தூய ஒழுக்கமுடையவர். அவர் முகத்தைப் பார்த்தவர்க்கும் அகத்தில் அன்பு பிறக்கும். பரந்த அறிவும் விரிந்த கோக்கமும் உயர்ந்த காட்டுப்பற்றும் உடையவர் இராசேந்திரர். அவர் பொறுமையும் அடக்கமும் ஒருங்கு பொருந்தியவர். எவரையும் இழிவாகக் கருதும் இயல்பு, அவருக்குக் கிடையாது. பாரதத் தாய்க்கு அவர் செய்துள்ள பணிகள் எவரையும் திடுக்கிடச் செய்யும்.” இவ்வாறு சச்சிதானந்த சின்கா, இராசேந்திரரை உச்சி மேல் கொண்டு போற்றினர். இங்ங்ணம் அயல்நாட்டு அறிஞரும், உள்நாட்டு உயர்ந்தோரும் உவந்து புகழ்பாட ஒளி வீசிய பெருமான் இராசேந்திரர், தேசப் பணியாலும் நேசக் குணத்தாலும் தேசுற்று விளங்கும் இராசேந்திரர், இந்நாளில் குன்றின் மேலிட்ட மணிவிளக்காய் இசையின் சிகரத்தில் வீற்றிருக்கிரு.ர். - உக. இராசேந்திரரின் இனிய பண்புகள் பீகார் நாட்டின் பெருவள்ளலாக விளங்கிய இராசேந்திரரின் இனிய பண்புகள் அவரை உலகறியச் செய்தன. இன்று குடியரசு பெற்ற பாரத நாட்டின் தலைவராக விளங்கும் தகுதியைத் தந்துள்ளன. அவரது தோற்றம், ஆற்றல், துய உள்ளம், இனிய மொழி, எளிய வாழ்வு ஆகிய இனிய பண்புகளைப் போற்ருதார் உலகில் இலர்.