பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திரரின் இனிய பண்புகள் 77 இராசேந்திரர் இளம்பருவத்திலிருந்தே பொது தலப் பணியில் ஈடுபட்டார். கல்கத்தாப் பல்கலைக்கழகத் தில் பயின்று கொண்டிருக்குங்கால் பீகார் மாணவர் நலனுக்காகப் பெரிதும் தொண்டு புரிந்தார். பீகார் மாணவர்க்கும் வங்க மாணவர்க்கும் ஒற்றுமையை உண்டு பண்ண மாணவர் மாநாட்டைக் கூட்டினர். கல்கத்தா வில் காங்கிரசுப் பேரவை கூடிய காலத்தில் தொண்டர் படையில் சேர்ந்து கண்டவர் வியக்குமாறு விருப்புடன் பணிபுரிந்தார். அவர், முசபர்பூர் கலாசாலைப் பேராசிரியப் பணியை ஏற்றபொழுது அக் கலாசாலையின் கி திங்லே மிகவும் குறைவுற்றிருந்தது. அதனுல் தகுந்த ஆசிரியர்களின்றி மாணவர்களின் கல்வித்தரமும் தாழ்ந்துவிட்டது. அதனே உணர்ந்த இராசேந்திரர் கலாசாலேயின் நிதிநிலையையும் கல்வித்தரத்தையும் உயர்த்துவதற்கு அரும்பாடுபட்டார். ஓராண்டிற்குள் அக் கலாசாலேயைத் தக்க நிலைக்குக் கொண்டு வந்த பெருமை இராசேந்திரரையே சாரும். இராசேந்திரர் 1905-ஆம் ஆண்டில் பி. ஏ. தேர்வு எழுதி, மாகாண முதல்வராகத் தேர்ச்சி பெற்ருர், உடனே, அவரை ஐ. சி. எஸ். தேர்வுக்கு அனுப்ப வேண்டும் என்பது தந்தையாரின் பேராவல் தந்தை யாரின் சொல்லேத் தட்டி நடவாத பிள்ளை இராசேந்திரர். ஆயினும், ஐ. சி. எஸ். தேர்வில் வெற்றிபெற்று ஆங்கி லேயருடைய அரசியல் அடிமையாகத்தானே உத்தியோ கம் நடத்தவேண்டும் ! என்று அவர் தந்தையாரின் விருப்பிற்கு இசையவில்லே. -- தந்தையாருக்குப் பின் தமையனர் மகேந்திரரின் பாதுகாப்பில் இராசேந்திரர் வளர்ந்து வந்தார். அவர்