பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 முதல் குடியரசுத் தலைவர் தம் தம்பி நன்கு கற்றுப் பெரும்பொருள் தேடிக் குடும் பத்தை உயர்ந்த கிலேக்குக் கொண்டுவருவான் என்று நம்பியிருந்தவர். அக் கிலேயில் இராசேந்திரர் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து, நாட்டிற்குச்சேவைசெய்யப் போவதாகத் தமையனுருக்குத் தெரிவித்தார். அதனை அறிந்த தமையனுராகிய மகேந்திரர், தாம் எண்ணிய மனக்கோட்டையெல்லாம் தகர்ந்துவிடுமோ என்று கண்ணிர் சொரிக்தார். அவர் வருங்துவதைத் தெரிந்த இராசேந்திரர், தமையனர் எண்ணத்திற்கு மாருக எதுவும் செய்யலாகாது என்று தமது எண்ணத்தையே மாற்றிக்கொண்டார். இங்ஙனம் தந்தையார், தமைய னர் முதலிய பெரியோர்களிடத்துப் பேரன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்ட நல்ல பிள்ளை இராசேந்திரர். பேராசிரியப் பணியினின்று நீங்கிய இராசேந்திரர் கல்கத்தா சட்டக்கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானர். முதலில் கல்கத்தா உயர்நீதி மன்றத்திலும், பின்பு பாட்னு உயர்நீதி மன்றத்திலும் அவர் வழக்கறிஞர் தொழிலைத் திறம்பட நடத்தினர். அவருடைய சட்ட நூற்புலமை, வழக்காடும் வன்மை, சிறந்த சொல் வன்மை, நேர்மை, தூய்மை முதலிய நலங்களைக் கண்ட மக்கள் அவரைச் சிறந்த வழக்கறிஞராக மதித் தனர். அதல்ை அவருக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே மாதம் ஒன்றிற்குப் பல்லாயிரக் கணக்கில் வருவாய் வந்து குவிந்தது. அவர் தாம் தேடிய செல்வத்தில் பெரும் பகுதியை ஏழை மக்கட்கு உதவி அவர்களது இன்முகம் கண்டு மகிழ்வார். 1934-ஆம் ஆண்டில் பீகார் நாட்டில் பெரிய பூகம்பம் ஏற்பட்டதன்ருே அப்பொழுது இராசேந்திரர்