பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 முதல் குடியரசுத் தலைவர் களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். அப்பொழுது பீகார் மாகாணத்தில் அமைச்சர் அவையை அமைக்கவும், முதலமைச்சர் பதவியைத் தாங்கவும் இராசேந்திரரையே எல்லோரும் வேண்டிக்கொண்டனர். அவர் அமைச்சுப் பதவியில் சிறிதும் பற்றில்லாதவராய்த் தம் தோழர் களேயே அமைச்சர்களாக்கிப் பெரிதும் மகிழ்ந்தார். அவர்கள் பெற்ற பெருமையைத் தாம் பெற்றதாகவே எண்ணி இன்புற்ற பெரியார் இராசேந்திரர். இங்ஙனம் பதவிப் பற்றற்று விளங்கிய இராசேந்திரர் பதவியேற்ற அமைச்சர்களுக்குப் பக்கத் துணையாக இருந்து மிக்க உதவி புரிந்து வந்தார். 1987-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்து இன்னது செய்வதெனத் தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது இந்தியா வில் சுதந்திரப் போரும் நடந்துகொண்டிருந்தது. இச் சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் இராட்டிரபதியாக விளங்கினர், அவர், இச் சமயத்தில்தான் இங்கிலாங் தைத் தாக்கி நம் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்,' என்று காங்கிரசுத் தலைவர்களிடம் வற்புறுத்தினர். அப்பொழுது அறமே உருவாய் விளங்கிய காந்தியடிகள் "அது அறமன்று என்று வாதாடினர். அவரது கருத்தை மறுத்து, மறப்போரைத் தொடங்கவேண்டுமென மன்ருடினர் சுபாஷ் சந்திரர். அச் சமயத்தில் அன்பே உருவான இராசேந்திரர் சுபாஷ் சந்திரரைச் சந்தித்துப் பண்பான மொழிகள் பல் பகர்ந்தார். ' அறவழியாலன்றி மறவழியால் ஒருநாளும் நாம் சுதந்திரத்தைப் பெறலாகாது; இன்னலுக்கு உள் ளாகியுள்ள இங்கிலாந்தை நாமும் எதிர்த்துத் தாக்குதல்