பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్రి முதல் குடியரசுத் தலைவர் போக்குதற்கு இராசேந்திரர் இரவு பகலாக உழைத்தார். நாடெங்கும் சென்று உணவுப் பொருள்களைப் பெருக்கு தற்கு வகை தேடினர். அது சமயம் 1947-ஆம் ஆண்டு மே மாதத்தில் சென்னே மாநகருக்கும் வந்து பசியால் வாடிய மக்களுக்கு ஆறுதல் அளித்தார். உணவுப் பங்கீட்டு முறையை நாடெங்கும் பரப்பி, ஏழைகளின் பசித்துயரைப் போக்கினர். இங்கனம் பசிப்பிணி என் னும் பாவியை ஒழித்த பெருமானது புகழை அளவிட்டுப் பேச முடியுமோ !

      • بسم معجیببے .......جمجمسےیہ مضم:عبد

உஉ குடியரசுத் தலைவர் இராசேந்திரர் இந்திய நாடு 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் பதினைந்தாம் நாள் முழுவுரிமை பெற்ற பாரத நாடாக மலர்ச்சியுற்றது. இச் சுதந்திர பாரதத்தின் அரசியல் சட்டங்களே ஆராய்ந்து திருத்தி அமைத்தற்குச் சட்டக் கலையில் வல்லுநரான பல்லோர் கூடிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப் பெற்றது. அதற்கு வல்லார் ஒரு வரைத் தலைவராக்க விரும்பினர் அரசியல் தலைவர்கள். அப் பதவிக்குத் தகுதியுடையார் இராசேந்திரரே என்று எல்லோரும் ஒன்றுபட்ட உள்ளத்துடன் உரைத்தனர். இடைக்கால அரசியல் உணவு அமைச்சராகப் பணி புரிந்து கொண்டிருந்த இராசேந்திரர் அரசியல் கிர்ணய சபைத் தலைவர் பதவியை ஏற்ருர். அவரது தலைமையில் தொடங்கிய அச் சபை நெடுநாள் ஆய்வு கடத்திப் பாரதக் குடியரசின் அரசியல் அமைப்பை உருவாக்கி உதவியது. அதன் பின்னர் 1951-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் பாரதக் குடியரசு மலர்ந்தது. அவ் அரசியல் அமைப்பு முறைப்படி நாட்டில் பொதுத்தேர்தல் கடைபெற