பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசுத் தலைவர் இராசேந்திரர் 85 பிருக்கிற அளவுக்கு, முன்ளிைல் எப்போதுமே தேவைப் பட்டதில்லே என்று கூறலாம். 'புத்தர் மிக உயர்ந்த கிலேயில் இருந்துகொண்டு மக்களுக்கு உபதேசம் செய்யவில்லை. மிகவும் சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் செயலளவில் பயன்படக் கூடிய சிறந்த உண்மைகளேயே அவர் உரைத்தருளினர். எதிலுமே தீவிர கிலேயைக் கைக் கொள்ளாமல் சிறந்த இடுகிலேமையைக் கையாளும்படி அவர் கூறிய தத்துவம் உலகிற்குக் கிடைத்த மிக அரிய போதனையாகும். மனிதன் அணுவாற்றலேக் கொண்டு நன்மையையோ நாசத்தையோ உண்டுபண்ணுவதற்கு வல்லமை பெற்றுள்ள இன்றைய சூழ்நிலையில் புத்தரின் வாழ்க்கைத் தத்துவமும் மனித சமுதாயத்துக்கு அவர் விடுத்துள்ள அறவுரையும் இப்போது தனிப்பெருஞ் சிறப்பைப் பெற்றுள்ளன. "எல்லா நாடுகளிலும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய அறிஞர்கள் அனேவரும் இப்போது புத்தர் போதனை களே நடைமுறையில் கையாளவேண்டிய காலம் வந்து விட்டது என்று உணர்ந்து வருகிருர்கள். நீண்ட கால மாய் வரலாற்று நூல்களில் மட்டுமே போற்றி வழிபடப் பெற்று வந்த புத்தரின் சமாதான அன்பு நெறியை கடை முறையில் கையாண்டு உறுதியான பேரழிவிலிருந்து காத்து மீட்பதற்குரிய காலம் நெருங்கிவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்து வருகின்றனர். இன்று கொண் டாடப் பெறும் புத்தரின் 3500-ஆவது ஆண்டுவிழா, இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அமைதி யான சூழ்நிலையை அனைத்துலகிற்கும் உண்டுபண்ணு மென உறுதியாக எண்ணுகின்றேன்.