பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முதல் குடியரசுத் தலைவர் 'புத்தர் பெருமான் தோன்றி வாழ்ந்து பொருளுரை களே வழங்கிப் புனிதப்படுத்திய நாடு, நம் பாரதப் பெரு நாடாக இருந்தபோதிலும், மற்றைய மாபெரும் ஞானி களைப் போலவே உலகம் முழுதிற்கும் அவர் உரியவ ராவர். அவரது போதனையும் உண்மையில் உலகனைத் திற்குமே பொருந்துகிற சிறந்த பொன்மொழியாகும்.” இவ்வாறு இராசேந்திரர், புத்தரின் போதனை மாண்பை உலகிற்கு எடுத்து விளக்கினர். தமிழகத்தில் தொண்டை நாட்டின் பண்டைத் தலைநகரமாக விளங்கிய காஞ்சிமாநகருக்கு நம் குடியரசுத் தலைவர் 1958-ஆம் ஆண்டு மே மாதத்தில் வருகை புரிந்தார். அப்பொழுது அந் நகருக்கு ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ள சர்வோதயபுரத்தில் சர்வோ தய மாநாடு ஒன்று நடைபெற்றது, அம் மாநாட்டில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவராகிய இராசேந்திரர் கிலக்கொடை இயக்கத்தைப் போற்றி நீண்ட உரை யொன்று நிகழ்த்தினர். “உலகம் தனது தீராத பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துக்கொள்ள கிலக்கொடைத் தத்துவமே ஒரே கிலேயான தீர்வாகும். எதையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாதிருப்பதே பூதான இயக்கத்தின் புனித தத்துவமாகும். இஃது ஒப்புயர்வற்ற உலக இயக்க மாகும். ஆதலின் இவ் இயக்கச் செய்தி, எங்கும் எளிதில் பரவும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. இதனே அரசாங்கம் மேற்கொள்ளவில்லேயே என்று இவ் இயக்கத் தொண்டர்கள் சோர்ந்துவிடக் கூடாது. வரலாற்றை நோக்கினல் எந்த அரசாங்கமும் எந்தக் காலத்திலும் எந்த இயக்கத்தையும் தொடங்கியதில்லே.