பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடியரசுத் தலைவர் இராசேந்திரர் 87 புத்தர் தம் போதனைகளைப் பரப்புதற்கு முன் தமது அரசினத் துறந்தார். உலகிற்கு அறநெறிகளே உப தேசித்த ஏசுவும் நபியும் அரசர்களல்லர். 'இப் பூதான இயக்கம் பிறநாடுகளிலுள்ள அறிஞர் களின் சிந்தனேயைக் கவர்ந்துவிட்டது. இவ் இயக்கத் தொண்டர்களின் செயலையெல்லாம் இன்று உலகம் நன்ருகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உறுதி யுடனும் ஊக்கத்துடனும் இச் செயலில் முன்னேற வேண்டும் என்று கான் விரும்புகிறேன். இவ் இயக்கம் மிகவும் புரட்சிகரமானது. மற்றைய இயக்கங்களுக்கும் இதற்கும் மலேக்கும் மடுவிற்கும் உண்டான வேறுபாடு உண்டு. பிற இயக்கங்கள் எல்லாம் செல்வத்தைப் பெருக்கவும் நாட்டைக் கவரவுமே முனைகின்றன. பூதான இயக்கத்திற்கோ அங்கனம் எடுக்கத் தெரியாது; கொடுக்கவே தெரியும், ーリ - ‘அரசாங்கம் நீண்டகாலமாக நிறைவேற்ற முடியாத ஒரு செயலே இவ் இயக்கம் ஒருசில ஆண்டுகளில் நிறை வேற்றியிருப்பது கண்டு பாராட்டுகின்றேன். அரசாங் கமே இவ் இயக்க வேலையை எடுத்துக் கொண்டிருங் தாலும் இப்பொழுது இவ் இயக்கம் பெற்றுள்ள பெரு மளவு நிலத்தைப் பெற்றிருக்க முடியாது. ஆகையால் அரசாங்கத்தின் உதவியின்றியே இவ் இயக்கம் வெற்றி பெற வேண்டுமென்று நான் பெரிதும் விரும்புகிறேன்.” இங்கனம் குடியரசுத் தலைவர், பூதான இயக்கப் பணிகளைப் போற்றித் தொண்டர்களே வாழ்த்தினர். மேலும், அக் காஞ்சிமாநகரில் ச ர் .ே வ | த ய மாநாட்டை அடுத்து நடைபெற்ற ஆதாரக் கல்வி வளர்ச்சி மாநாட்டிலும் நம் குடியரசுத் தலைவர் கலந்து