பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முதல் குடியரசுத் தலைவர் பேருரை வழங்கினர். பாரத நாட்டிலுள்ள பல மாகா ணங்களின் கல்வி அமைச்சர்களும் கல்வித்துறை அதி காரிகளுமாக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கல்வித் துறை வல்லார்கள் அம் மாநாட்டில் திரண்டிருந்தனர். அப்பொழுது குடியரசுத் தலைவராகிய இராசேந்திரர் ஆற்றிய பேருரை, நாட்டின் வருங்காலப் பெருவாழ்வுக்கு ஆடிகோலியது போன்ற அருமையுடையதாகும் "ஆதாரக் கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கவேண்டிய பொறுப்பு, பாரத காட்டிலுள்ள ஒவ்வொரு மாகாண அரசிற்கும் உயிர்காடி யான கடமையாகும். ஆதாரக் கல்வி என்ற பெயரே காட்டிற்கு அடிப்படை என்ற கருத்தை நன்ருக வலி யுறுத்துகிறது. இக் கல்விமுறை, பல்கலைக்கழகப் படிப்புவரை பரவினலொழிய நாட்டில் அதிக முன்னேற் றத்தைக் காணமுடியாது. தற்காலத்தில் உள்ள இன வேற்றுமைக்கும் சமத்துவமின்மைக்கும் இப்போதுள்ள கல்வி முறையே முக்கிய காரணமாகும். இவ் வேற்று மைகள் காட்டை விட்டொழிய இளைஞர்களிடையே ஆதாரக் கல்விமுறை பரவுதல் வேண்டும். இதுவே இந்திய சுதந்திரத் தந்தையாராகிய காந்தியடிகள் இக் நாட்டிற்கே இறுதியாகக் கொடுத்த சிறந்த நன்கொடை யாகும்.” இங்ங்னம் பாரதப் பேரரசின் முதல்குடியரசுத் தலைவராகிய இராசேந்திரர் ஆற்றிய பேருரைகள் பலவும் காட்டின் வருங்காலத்தை நன்முறையில் உருவாக்கும் பொன்மொழிக் களஞ்சியங்களாகும். مساحتیاج سسسه