பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பேரறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில் வல்லுநர் ஆகியோர்களுக்கு வேண்டிய நூல்களை இந்த நூலகங்கள் வழங்கவில்லை. ஏனென்றால், ஆராய்ச்சியாளர்க்கும், பல்துறை அறிஞர்க்கும் நூல்வழங்குதல் தங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று இந்த நூலகங்கள் நினைக்கின்றன. கிடைத்தற்கரிய பழைய நூல்களை இந்நூலகங்கள் காத்தோம்பலும் இல்லை. மேற்கூறிய பலதுறை அறிஞர்க்கும் நூல் வழங்க வேண்டுமாயின் பல்துறைகளேயும் சேர்த்தல், காத்தல், வகுத்தல், வழங்குதல் ஆகிய பணிகளைச் செய்வதற்கு ஓர் அரிய திட்டம் தீட்டப்படல் வேண்டும். இத்தகைய திட்டத்தைப் பொது நூலகங்களே மேற்கொள்ள முடியும்.

நூல்கள் பல திறப்படும். பல திறப்பட்ட பல்லாயிரக்கணக்கான நூல்களையும் தேடிச் சேர்த்து, நூலகங்கள் பலதிறப் படிப்பாளர்க்கும் வழங்கல் வேண்டும். பல திறப்பட்ட நூல்களையும். அவ்வவற்றிற்குரிய தனித்தனியான இடங்களிலே ஒழுங்காகக் கவர்ச்சியான முறையிலே படிப்பாளர்கள் எவ்விதத் தடையும் தயக்கமும் இன்றி எளிதில் எடுத்துப் படிக்கத்தக்க முறையிலே நூலகங்களிலே அடுக்கி வைக்கப்படல் வேண்டும். இவ்வாறு நூலகத்தை அமைப்பதே கல்விக்குச் செய்யும் ஒரு பெரும் பணியாகும். ஏனென்றால், பல திறப்பொருள் பற்றிய விளக்கங்களை வழங்குவதோடு, நூல்களை எடுத்துப் படிப்பதற்கும் இந்த நூலகம் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

புத்தம் புதிய நூல்களை மட்டும் வாங்கி வைத்தல் போதாது. இன்றைக்குத் தேவையற்ற பழைய நூல்களை