பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

நூலகம், சமய நூலகம்,பொருட்காட்சி நூலகம், தொழில் நூலகம், அறிவியல் நூலகம் முதலிய எத்தனையோ நூலகங்கள் நாட்டிலே உள்ளன. இவை தவிர, பொது நூலகம், சந்தா நூலகம் போன்றனவும் உள. லண்டன் மாநகரில் மட்டும் சிறந்த நூலகங்கள் எழுநூறு உள்ளன. இவற்றையெல்லாம் வகைப்படுத்தி ஆராய்தல் என்பது எளிதன்று.

முதன் முதலில், எல்லா மக்களும் விரும்பும் பொது நூலகங்களையும் அவற்றின்முன்னோடிகளையும் ஆராய்தல் மிகவும் எளிதாகும். எனினும் அவற்றை ஆராய்வதிலும் நாம் சில இடையூறுகளை ஏற்கவேண்டித்தான் உள்ளது. ஏன் என்றால், பொது நூலகத்தைப் பயன்படுத்துகின்ற பொதுமக்கள் என்று குறிப்பிட்ட ஓர் இனம் இல்லை. பொதுமக்களிலே, கதை, கட்டுரை. முதலிய எல்லா நூல்களையும் படிப்போருக்குள்ளேயே கட்டுரையை மட்டும் பெருவிருப்புடன் தனித்து வைத்துப் படிப்போரும் உண்டு. ஒரு துறையிலேயே பெரு விருப்புடன் படிக்கும் அறிஞர்களிலே, கதை,நெடுங்கதை, புதினம் போன்ற பிற நூல்களையும் பொதுவாகப் படிப்போரும் உண்டு. பொதுநூலகம் என்பது குறிக்கோளற்ற மக்கள் படிக்கும் நூல்களைக் கொண்ட ஒரு நூலகம் என்று எண்ணுவது தவறாகும். கல்லூரிகளிலே ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே இருக்கும் நூலகங்களைத் தனி நூலகங்கள் என்னலாம். கல்லூரியிலே பொதுவாக எல்லா மாணவர்க்கும் உரியதாக இருப்பது பொது நூலகம் என்று சொல்லப்படும், இத்தகைய பிரிவினை தெளிவற்றதாகத் தோன்றுதல் இயல்பு. தனி நூலகத்துக்கும் பொது நூலகத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அதிக