பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


சந்தா நூலகங்களிலே சிறந்த நூலகம் லண்டன் பாலகமாகும். இந்த நூலகம் 1841-ல் கார்லைல், கிளாட்ச்டன் போன்ற அறிஞர்கள் பலர் கூடித் தோற்றுவிக்கப்பட்டதாகும். டிக்கன்சு, தேக்ரே, தெனிசன், மெக்காலே முதலிய பேரறிஞர்கள் இந்த நூலகத்தை நன்கு பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இன்று இந் நூலகத்திலே காட்சி நல்கும் நூல்களின் எண்ணிக்கை ஐந்நூறாயிரம். உலகத்திலே உள்ள சந்தா நூலகங்களிலே இங்குத்தான் இவ்வளவு நூல்கள் உள்ளன.

அதீனிய நூலகம், மறுமலர்ச்சி நூலகம், ஆக்ச்போர்டு நூலகம். கேம்பிரிச் நூலகம், ராயல் கழக நூலகங்கள் முதலிய நூலகங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ஏற்பட்டவையாம்.

இந்த துவகங்களால், தொழிலாளிகள், பேரறிஞர்கள்,கலைஞர்கள் ஆகிய தொழிலார்வம் மிக்க பெரு மக்களுக்கும், ஏற்ற நூல்களை வழங்க முடியவில்லை. ஆனால் தங்களுடைய தொழில் தொடர்பான நூல்களை மேலும் மேலும் படிக்க வேண்டும்; புதுத் தொழில்களைச் செய்ய வெண்டும்; தொழிலில் முன்னேறவேண்டும் என்ற அவா மட்டும் தொழிலாளர் முதலிய தொழில் நிபுணர்களின் உள்ளத்திலே கொழுந்துவிட்டு எரியலாயிற்று. இதனை அறிந்தார் சார்ச் பிர்க்பெக் (George Birkbek) என்ற ஓர் ஆண் பேராசிரியர். இவர் கிளாச்கோவில் உள்ள ஆண்டர் சோனியன் கல்வி நிலையத்திலே இயற்கைப் பாடப் பேராசிரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்