பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

பொதுமக்கள் பயன்படுத்தும் நூல்களின் முழுப்பயனும் மக்கட்குக் கிடைக்கிறது என்று யாரும் செல்லமாட்டார்கள். மாறாக, பொது நூலகங்கள் சரிவரப் பணி செய்யுமானுல், அடுத்த பத்து இருபதாண்டுகளிலே படிப்பகப் பயன் இரண்டு மடங்காகலாம்;அவ்வளவுதான்.

நூலக சங்கம்

1807 ஆம் ஆண்டு நூலகச் சங்கம் (Library Association ) ஒன்று லண்டன் மாநகரில் தொடங்கப்பட்டது. பொது நூலகத் தலைவர்களும், பிற நூலக அலுவலர்களும், நூலக வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் காட்டியவர்களும் இச்சங்க உறுப்பினர்களாயினர். இச்சங்க, உறுப்பினர்களில் குறிப்பிடத் தக்கவர் செப்பீல்டு நகரப் பொது நூலகத்தில் பணியாற்றிய தாமசு கிரீன் (Thomas Green) வன்பவர் ஆவார். மேடைகள்தோறும் பேசியும், ஏடுகள் தோறும் எழுதியும். இல்லந்தோறும், மக்கள் உள்ளத் தோறும் நூலகங்களின் சிறப்பினைப் பதிவைத்தவர் இவரே இலவசப் பொது நூலகங்கள் என்ற 463 பக்கங்கள் கொண்ட நூலொன்றை எழுதி வெளியிட்டார்-; இது நூலகத்துறை பற்றிய தலைசிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது நூலகங்களைப் பற்றிய செய்திகளையும் அவை புரியும் சேவைகளையும் விளக்கிப் புதிய முறையில் வெளியிடப்படட இந்நூல் பல்வேறு தலைப்புக்களில் பல பதிப்புக்களாக உலகெங்கும் பரவின. கி.பி 1910 விருந்து 1937 ஆம் ஆண்டுவரை இந்நூலின் பல பதிப்புக்களை வெளியிட்டவர் பிலிப்சு என்பவராவார். 1948 இல் இறுதியாக வெளிவந்த பதிப்பின் பதிப்பாசிரியர் , சேம்சுகிளார்க்காவர். எண்ணிறந்த மக்களுக்கு நூலகத்தைப் பற்றிய அரிய செய்திகளை விளக்கி, ஆயிரம் ஆயிரம்,