பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

நூலகத்திலும் பல பகுதிகள் பாங்குடன் விளங்குகின்றன. உடன் உதவும் நூற் பகுதி (Reference Section) ஒன்றுதான் அனைவராலும் விரும்பப்படும் தலைசிறந்த பகுதியாகும். மழலை மொழி பேசும் குழந்தைகட்கும். பள்ளி செல்லும் சிறார்க்கும், மருத்துவக் கூடத்தில் இருப்பவர்களுக்கும், ஆண்டில் முதிர்ந்தவர்கட்கும் இப் பொது நூலகங்கள் நூல்களை அனுப்பி அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றன. மேலும் நூலகங்களில் அடிக்கடி சொற்பொழிவுகளும், சொற்போர்களும் நடத்தப்படுகின்றன. இசையின் இனிமையினைப் பருக விரும்புவோர் நூலகங்களுக்குச் சென்று இன்னிசை கேட்டு மகிழலாம். நூல்களைப் போன்று இசைத் தட்டுக்களையும் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவரலாம். இடையிடையே செய்திப் படங்கள் சிந்தை களிக்கக் காட்டப்பெறும். மேலும் அடிக்கடி பொருட்காட்சிகள் பல நூலகத் துறையினரால் நடத்தப்படும்.