பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. நகர நூலகம்

பொது நூலகம் மூன்று சிறந்த பணிகளைச் செய்கின்றது. (1) வீட்டிலே வைத்துப் படிக்க நூல்களை வழங்கல், (2) குறிப்பு நூலகத்தின் மூலம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வேண்டிய குறிப்புக்களை வழங்கியுதவல், (3) நாள். வார முதலிய பருவ வெளியீடுகளை வழங்கல்.

சிறு நூலகங்கள் பெரும்பாலும் மேலே கூறியவற்றில் ஓரிருபணிகளை மட்டும் செய்யும். பெரிய நூலகங்கள் மேற்கூறிய பணிகளோடு, வேறு பல உதவிகளும் வாய்ப்புக்களும் அளிக்கும்.

மேற்கூறிய நூலகப் பணிகளை, நாற்பதாயிரம் மக்களுடைய ஒரு நகர நூலகத்தை ஆராய்ந்தால் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் நகரிலேயே வாழ்வதால், அதற்கு ஒரு நூலகக் கட்டிடம் போதுமானதாகும். நூலகம் நகரின் நடுவிலாவது கடைத் தெருக்களுக்குச் சற்றே தள்ளியாவது அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் அந்த நூலகக் கட்டிடம் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகவும், சிற்பவேலைப்பாடுகள் மிகவுடையதாகவும் இருப்பதியல்பு. அதனால் தற்காலத்து அக் கட்டிடம் போதுமானதாக இருக்காது. தற்காலத்திலே ஒரு நூலகக் கட்டிடம் கட்டப்பட்டுளது என வைத்துக் கொள்ளுவோம். நூலகத்-